காரியம் ஆகணும்-னா கால் வரும்!! பையனை அப்பட்டமாக கலாய்த்த உதயநிதி..
தமிழ் நாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சராகவும், நடிகராகவும் திகழ்ந்து வரும் உதயநிதி ஸ்டாலின், மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். அமைச்சராக இருப்பதால் மாமன்னன் படம் தான் தன்னுடைய கடைசி படம் என்று பல இடங்களில் கூறியிருக்கிறார்.
கடைசி படமான மாமன்னன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. அப்படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளில் கலந்து கொண்டு பேசி வரும் உதயநிதி, தொகுப்பாளர் கோபிநாத் எடுத்த பேட்டியில் கலந்து கொண்டு பல தனிப்பட்ட விசயங்கள் படங்கள், அரசியல் அனுபவங்களை பகிர்ந்து வந்துள்ளார்.
அந்த பேட்டியொன்றில் தன் மகன் அம்மாவிடம் தான் நெருக்கமாக இருப்பன். எல்லாத்தையும் அவங்ககிட்டதான் சொல்லுவான். என்னிடம் எதாவது ஒரு காரியம் ஆகணும்னா மட்டும் தான் கால் பண்ணுவான்.
அம்மா வேண்டாம்னு சொன்னா என்னிடம் கூறிவான். அதற்கு உன் இஷ்டம் நீ பண்ணுன்னு சொல்லிடுவேன். உங்க அம்மா என்ன சொல்றது நான் உன் வயசுல என்னலாம் செஞ்ச தெரியுமா, எல்லாத்தையும் அம்மாவை கேட்டா பண்ணேன்னு ஓகே சொல்லுவேன்.
நான் சம்மதிக்கவில்லை என்றால் அவன் தாத்தாவுக்கு (ஸ்டாலின்) கால் பண்ணி சம்மதம் வாங்கிடுவான் என்று உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக கூறியுள்ளார்.