விஜய்க்கும் எனக்கும் பிரச்சனைக்கு பின்.. ஓப்பனாக பேசிய உதயநிதி ஸ்டாலின்..

Udhayanidhi Stalin Vijay Gossip Today Gopinath Chandran Maamannan
By Edward Jun 27, 2023 05:45 PM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகராகவும் விளையாட்டுத்துறை அமைச்சராகவும் திகழ்ந்து வரும் உதயநிதி ஸ்டாலின் மாமன்னன் படத்தின் பிரமோஷனுக்காக பல பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

பல விசயங்களை பகிர்ந்து வரும் உதயநிதி, நீயா நானா கோபிநாத் எடுத்த பேட்டியொன்றில் விஜய்யுடன் ஏற்பட்ட பிரச்சனை குறித்து பகிர்ந்துள்ளார். விஜய்க்கும் எனக்கும் நல்ல நட்பு இருந்தது, இடையில் யாரோ ஒருவர் ஏற்பட்டுத்தி பிரச்சனையால் பிரிந்துவிட்டோம்.

அதன்பின் நான் பேசியதும் சரியாகிவிட்டது என்று பேட்டியொன்றில் கூறியது பற்றி கேட்டுள்ளார் கோபி. விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்தி மெசேஜ் செய்தேன், அவரும் நன்றி என்று கூறினார். பிரச்சனை என்ன என்று என்னிடம் கேட்கிறார்கள் அவரிடம் தான் கேட்கனும் என்று உதயநிதி கூறியுள்ளார்.

மேலும், சட்டமன்ற உறுப்பினரான பின் என் வீட்டு நிகழ்ச்சியில் பார்த்து பேசினேன். சினிமா, அரசியல் பற்றி பேசவில்லை. அரசியல் வருவது குறித்து அவரிடம் கேட்கவேண்டும். அவர் செய்வது நல்ல முயற்சி, தொடர்ந்து செய்யட்டும் என்று உதயநிதி கூறியுள்ளார்.