என் பையன் என்னவிட லூட்டி பண்ணிட்டு இருக்கான்!! இன்பநிதி பற்றி ஓப்பனாக பேசிய உதயநிதி..
சினிமாத்துறையில் நடிகராகவும், தமிழ் நாட்டு விளையாட்டுத்துறையில் அமைச்சராகவும் திகழ்ந்து வருபவர் உதயநிதி ஸ்டாலின். கலகத்தலைவன் படத்திற்கு பின் மாமன்னன் படம் தான் தன்னுடைய கடைசி படம் என்று கூறி வந்தார்.
இன்று மாமன்னன் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தியேட்டர்களில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்திற்காக உதயந்தி ஸ்டாலின் பல பேட்டிகளில் கலந்து கொண்டு பல விசயங்களை பகிர்ந்து வந்துள்ளார்.
அப்படி தொகுப்பாளர் கோபிநாத் எடுத்த ஒரு பேட்டியொன்றில் தன்னுடைய காதல் மற்றும் மகன் காதல் பற்றி கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த உதயந்தி, கிருத்திகா 12 ஆம் வகுப்பு படிக்கும் போது நான் கல்லூரி முதலாம் ஆண்டு.
அப்போதில் இருந்து கிருத்திகாவுடன் 7, 8 வருடமாக காதலித்து வந்தார். இதுபற்றி, அப்பாவிடம் தனியாக பேசவேண்டும் என்று கூறி சம்மதம் வாங்கினேன். காதல் திருமணம் இல்லை என்றால் ஒருமாதிரி பார்க்க ஆரம்பித்து எதாவது பிரச்சனையான்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.
லவ் மேரேஜ் சர்வ சாதாரணமா ஆகிடுச்சி. என் பையனும், நான் பண்ணதவிட லூட்டிலாம் அடிச்சிட்டு இருக்காம். அவன்கிட்டயே, பாத்து பண்ணுப்பா, வயசுக்கு ஏத்தமாதிரி பண்ணுன்னு சொல்லி இருக்கேன் என்று உதயநிதி ஓப்பனாக பகிர்ந்துள்ளார்.