வாரிசு நடிகையை ஷூட்டிங்கில் டார்ச்சர் செய்த பிரபல நடிகர்!! வம்பில் சிக்கவைத்த பிரபலம்..

Pushya Rashmika Mandanna Allu Arjun
By Edward 1 வாரம் முன்
Edward

Edward

Report

இந்திய சினிமாவில் நேஷ்னல் கிரஷ் என்று ரசிகர்களால் புகழப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் கால் பதித்து பிரபலமான ராஷ்மிகா, தமிழில் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் மூலம் அறிமுகமாகினார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றதுடன் ராஷ்மிகாவில் நல்ல மார்க்கெட்டை உயர்த்தியது. இதன்மூலம் பாலிவுட் வரை சென்று நடித்து வருகிறார்.

வாரிசு நடிகையை ஷூட்டிங்கில் டார்ச்சர் செய்த பிரபல நடிகர்!! வம்பில் சிக்கவைத்த பிரபலம்.. | Umair Sandhu Open Rashmika Uncomfortable

ஏற்கனவே நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ரகசிய காதலில் இருப்பதாகவும் இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வீடியோக்கள் லீக்காகியும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பிரபல பாலிவுட் விமர்சகர் உமைர் சந்து, ராஷ்மிகா மந்தனா பற்றிய ஒரு தகவலை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய நடிகர்களை தொடர்ந்து பாலிவுட் நட்சத்திரங்களில் அந்தரங்க தகவல்களை சமீபகாலமாக வெளியிட்டு வரும் உமைர் அதிர்ச்சியூட்டும் செய்தியை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.

வாரிசு நடிகையை ஷூட்டிங்கில் டார்ச்சர் செய்த பிரபல நடிகர்!! வம்பில் சிக்கவைத்த பிரபலம்.. | Umair Sandhu Open Rashmika Uncomfortable

அதாவது புஷ்பா 2 படத்தின் ஷூட்டிங்கில் இருந்து நடிகை ராஷ்மிகா மந்தனா நேற்று வெளியேறிவிட்டார்.

அதற்கு காரணம் நடிகர் அல்லு அர்ஜுன் கொடுத்த கிண்டலால் சங்கடமான சூழலுக்கு தள்ளப்பட்டதால் தான் என்று தெரிவித்துள்ளார். இதனை கேள்விப்பட்ட நெட்டிசன்கள் உமைர் சந்துவை படுமோசமான வார்த்தைகளில் திட்டியும் வருகிறார்கள்.