நடிகர் அரவிந்த் சாமி வளர்ப்பு பிள்ளையா?.. வெளிவந்த சாக்லேட் பாயின் ரகசிய வாழ்க்கை
90 களில் இளசுகளின் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் தான் அரவிந்த்சாமி. இவர் ரஜினி நடிப்பில் வெளியான தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இதையடுத்து தளபதி, இந்திரா, ரோஜா, பாம்பே எனப் பல படங்களில் நடித்து பிரபல நடிகராக மாறினார். சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த அரவிந்த்சாமி தனி ஒருவன் படத்தின் மூலம் மாஸ் கம்பேக் கொடுத்தார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற பத்திரிகையாளர் செய்யாறு பாலுவிடம் தொகுப்பாளர், அரவிந்த்சாமி வளர்ப்பு மகனா? என்று கேள்வி கேட்டார்.
இதற்கு பதில் அளித்த அவர், " இது போன்ற வதந்திகள் வெளியானது ஆனால் இது உண்மையா என்று எனக்கு தெரியவில்லை.
சிலர் அரவிந்த்சாமி சிறுவயதில் இருக்கும் போது டெல்லி குமார் அவருடைய உறவினரான சுவாமி என்பவரிடம் தத்து கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அரவிந்த்சாமி தனது சொந்த வாழ்க்கை பற்றி யாரிடமும் பேசியதில்லை என்று பேட்டி ஒன்றில் செய்யாறு பாலு கூறியுள்ளார்.