3 கோடிக்கு தங்கத்தில் கேக்!! லெஜண்ட் பட நடிகையின் பிறந்தநாளுக்கு ஷாக் கொடுத்த பிரபல பாடகர்..
ஊர்வசி
நடிகைகள் இப்போதெல்லாம் வித்தியாசம் காட்ட வேண்டும், மக்களிடம் தனியாக தெரிய வேண்டும் என நிறைய விஷயங்களை செய்கிறார்கள்.
பாலிவுட்டில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ஊர்வசி ரவ்துலா. இவர் தமிழில் தொழிலதிபர் சரவணன் அருள் ஹீரோவாக நடித்த தி லெஜண்ட் படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
இவர் அடிக்கடி நிறைய சர்ச்சைகளிலும் சிக்குவார். கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார், பின் பப்ளிசிட்டிக்காக செய்வதாக மக்கள் கோபம் கொண்டபர்.
இப்படி நிறைய விஷயங்கள் மூலம் பிரபலமான ஊர்வசி தற்போது தனது 30வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.
நடிகை ஊர்வசி ரவ்துலா தன்னுடைய பிறந்தநாளுக்கு 24 கேரட் தங்கத்தால் செய்யப்பட்ட கேக்கை தான் வெட்டி இருக்கிறார். அந்த தங்க கேக்கின் விலை மட்டும் ரூ.3 கோடியாம்.
ஹானி சிங் தான் இந்த கேக்கை நடிகை ஊர்வசி ரவ்துலாவுக்கு பரிசாக அளித்ததாக கூறப்படுகிறது.