என் 13 வயசுல கமல் காலில் விழுந்தாரு!! தேசிய விருது நடிகை ஊர்வசி ஓபன் டாக்..

Kamal Haasan Urvashi Tamil Actress National Film Awards
By Edward Aug 07, 2025 11:30 AM GMT
Report

நடிகை ஊர்வசி

தெனிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து தற்போது குணச்சித்திர ரோலில் நடித்து மிகப்பெரிய ஆதரவை பெற்று வருபவர் தான் நடிகை ஊர்வசி. 71வது தேசிய விருதிகளில் சிறந்த துணை நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டது.

என் 13 வயசுல கமல் காலில் விழுந்தாரு!! தேசிய விருது நடிகை ஊர்வசி ஓபன் டாக்.. | Urvashi Interview She Opens About Kamal Haasan

ஆனால் தனக்கு விருது அறிவிக்கப்பட்டது மகிழ்ச்சி அளித்தாலும் தேர்வுக்குழுவை சரமாரியாக விமர்சித்து பேசினார் ஊர்வசி. தொகுப்பாளர் கோபிநாத் எடுத்த பேட்டியில் கலந்து கொண்ட ஊர்வசி பல விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அதில், நான் 13 வயதில் ஹீரோயினாக அறிமுகமான போது 9ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். முந்தானை முடிச்சு பாத்தில் நடித்த போது 9ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நடந்துக்கொண்டிருந்தது.

என் 13 வயசுல கமல் காலில் விழுந்தாரு!! தேசிய விருது நடிகை ஊர்வசி ஓபன் டாக்.. | Urvashi Interview She Opens About Kamal Haasan

எப்படியோ தேர்வுகளை முடித்து 10ஆம் வகுப்பு சென்றேன். அப்போது முந்தானை முடிச்சு படம் வெளியாகி, அப்படத்தின் கண்ணைத்திறக்கனும் சாமி பாடலை பாடிக்கொண்டு பசங்க என் பின்னால் சுத்த ஆரம்பித்தார்கள்.

காலில் விழுந்த கமல்

கமல் ஹாசனுடன் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஒரு காட்சி முதல் நாள் ரிகர்சல் பார்க்கப்பட்டது. அப்போது ஒருமுறை ரிகர்சல் பார்த்ததும் கமல் சார் பேக்-அப் என்று கூறிவிட்டார். அடுத்தநாள் ஸ்பாட்டுக்கு வந்ததும் டேக் எனக் கூறிவிட்டார்கள். எனக்கு பாதி மறந்துவிட்டது. ஆனால் டேக்கில் நான் எப்படியோ நடித்துவிட்டேன்.

என் 13 வயசுல கமல் காலில் விழுந்தாரு!! தேசிய விருது நடிகை ஊர்வசி ஓபன் டாக்.. | Urvashi Interview She Opens About Kamal Haasan

கமல் சார் என்னை பாராட்டினார். அந்த படத்தில் இடம் பெற்ற பேர் வெச்சாலும் பாடலில் பாட்டியின் காலில் விழும் கமல் சார் அடுத்து என் காலில் சொல்லாமல் விழுந்துவிட்டார். அதை நான் கொஞ்சமும் எதிர்ப்பார்க்கவில்லை. நான் குதித்துவிட்டேன். இப்போது இந்த பாடலில் அந்த காட்சி உள்ளது.

என்னை மலையாள சினிமாவுக்கு போகச்சொல்லி அறிவுரை கொடுத்ததே கமல் சார் தான். நீங்க கிளோஸாகவும் கிளாமராகவும் நடிக்க மாட்டேன்னு சொல்றீங்க. உங்களுக்கு தமிழைவிட மலையாள படங்கள் சரியாக இருக்கும், அங்கு நீங்கள் நல்லநல்ல ரோல்களை தேர்வு செய்யமுடியும் என்று அறிவுரை கூறினார் கமல் சார் என்று ஊர்வசி பகிர்ந்துள்ளார்.