வாசுதேவனால் வழிக்கு வந்த அப்பத்தா.. மீனாட்சி கொடுத்த அதிர்ச்சி - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் போலீஸ் வீட்டுக்கு வந்து பணத்தை திருப்பி தரவில்லை என்றால் பாண்டியை கைது செய்து விடுவோம் என மிரட்டி என் நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, அப்பத்தா இதெல்லாம் வாசுதேவனின் வேலை தான் என்பதை புரிந்து கொண்டு நீங்க போங்க இதுக்கெல்லாம் யார் காரணம் என்று எனக்கு தெரியும் நான் உங்களிடம் பேசிக் கொள்கிறேன் என சொல்லி போலீஸை அனுப்பி வைக்கிறார்.
பிறகு அப்பத்தா வாசுதேவனுக்கு போன் செய்ய வாசுதேவன் உங்கள வழிக்கு வர வைக்க வேற வழி இல்ல என்று சொல்ல அப்பத்தா ஜீவா மீனாட்சி இந்த வீட்டுக்கு வர வைக்க சம்மதம் தெரிவிக்கிறார். பிறகு வீட்டுக்குள் வரும் அப்பத்தா எல்லோரையும் கூட்டி ரெண்டு மருமக இல்லாம நீங்க படுற கஷ்டத்தை என்னால பாக்க முடியல அதனால நான் உங்களை மன்னிச்சிட்டேன்.

மனோ நீ போய் அவங்கள வீட்டுக்கு கூட்டிட்டு வா என்று சொல்ல வீட்டில் உள்ள எல்லோரும் சந்தோஷப்படுகின்றனர். மனோ சந்தோசமாக கிளம்பி சுமதி வீட்டிற்கு வருகிறான். விஷயத்தை கேட்ட சுமதி சந்தோஷப்பட்டு தேன்மொழி அது துணிமணிகளை பேக் செய்ய தொடங்குகிறாள். ஆனால் மீனாட்சி இதற்கு சம்மதிபாளா என்ற சந்தேகம் மனோ மனதிற்குள் எழுகிறது.

அதற்கேற்றார் போல வீட்டுக்கு வந்த மீனாட்சி விஷயம் அறிந்து இதற்கு மறுப்பு தெரிவித்து அப்பத்தாவை வந்து அழைத்தால் வருவதாக பதிலடி கொடுக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.