விநாயகராக மாறிய ஜீவா.. கையெடுத்து கும்பிட்ட அப்பத்தா - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட்

Serials Zee Tamil Tamil TV Serials
By Karthick Raja Sep 23, 2026 07:24 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிவரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் வாகை சூடவா. இது சீரியலில் நேற்றைய எபிசோடில் தேவி பிள்ளையாரை தூக்கி கிணற்றில் வீசிய நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது பிள்ளையார் சிலை காணாமல் போனதால் வீட்டில் உள்ளவர்கள் எல்லோரும் அப்பத்தா என்ன சொல்லப்படுகிறது என பயந்து கொண்டிருக்கின்றனர். மீனாட்சி நாணய அக்காவும் இதை வீட்டுல அழுதுகிட்டே இருக்கணும் அதெல்லாம் பாத்து நீங்க சந்தோஷப்படணும் அதான் உங்க ஆசை என்று ஆவேசப்படுகிறாள்.

உடனே ஜீவா நீ அமைதியா இரு நான் பார்த்துக்கிறேன் என்று சொல்கிறான். மேலும் தேவி அப்பத்தாவுக்கு போன் செய்து உடனடியாக கிளம்பி வாங்க இங்க எல்லாரும் பதட்டத்துல இருக்காங்க என்று சொல்கிறாள்.

விநாயகராக மாறிய ஜீவா.. கையெடுத்து கும்பிட்ட அப்பத்தா - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Vaagai Sooda Vaa Today Episode Sep 23 2026

அப்பத்தா ஆட்டோவில் இறங்கி வீட்டுக்குள் நுழையும்போது வீடு முழுவதும் புகை போட்டிருக்க அப்பத்தா கோபப்படுகிறார். நீங்க வீட்ல இல்ல என்பதால் தான் புகை போட்டதாக சொல்கிறாள். பிறகு புகை கொஞ்சம் கொஞ்சமாக தெரிய ஜீவா பிள்ளையார் பாசத்தில் வந்து நிஜ பிள்ளையார் போலவே உட்கார்ந்து அப்பத்தாவும் தேவியும் அதிர்ச்சி அடைகின்றனர்.

பிள்ளையார் நிஜ சிலை போலவே இருப்பதை பார்த்து அப்பத்தாவே கையெழுத்து கும்பிட பிறகு வீட்டில் பூஜை நடக்கிறது. அப்பத்தா ரூமுக்குள் போய் தேவியை பிடித்து திட்டுகிறார்.

அடுத்ததாக ஜீவா ரொம்ப பசிக்குது என வேஷத்தை கலைத்துவிட்டு சுண்டல் கொழுக்கட்டை சாப்பிட்டுக் கொண்டு இருக்க வெளியே வந்து அப்பத்தா எனக்கும் பிரசாதம் கொடுங்க என வாங்கி சாப்பிடுகிறார். திடீரென மேஜிக் காலியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பிள்ளையார் எங்கே என்று கேட்கிறார்.

விநாயகராக மாறிய ஜீவா.. கையெடுத்து கும்பிட்ட அப்பத்தா - வாகை சூடவா இன்றைய எபிசோட் அப்டேட் | Vaagai Sooda Vaa Today Episode Sep 23 2026

பதட்டத்தில் லோகு பிள்ளையாராக இருந்தது ஜீவா தான் என்ற உண்மையை சொல்ல வர ஜீவா அப்பா நீயே மாட்டி விட்டுடாத என தடுத்து நிறுத்துகிறான். அதன் பிறகு மீனாட்சி நீங்க போட்ட மாதிரி நாங்களும் பிள்ளையாரை கிணத்துல போட்டுவிட்டதாக சொல்கிறாள். பிள்ளையாரையா மூணு நாள் வச்சிருந்து தான் போடணும் என்று அப்பத்தான் சொன்னதும் தெரியாம பூஜை நடந்தது கிணற்றில் கரைத்து விட்டதாக சொல்லி சமாளிக்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய வாகை சூடவா சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.