வடிவேலு வாழ்க்கையை புரட்டிப்போட்ட கமல் ஹாசன்!! 64 வயதை கடந்த மீம்ஸ் நாயகன்..
வடிவேலு
தமிழ் சினிமாவின் காமெடி லெஜெண்ட் என்று அறியப்படும் வைகைப்புயல் வடிவேலுவின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட படங்களில் ஒன்றாக இருப்பது தேவர்மகன் படம் தான். வடிவேலுவின் ஆரம்பகால வாழ்க்கையில் அவரின் திறமையை நிரூபிக்க சிலரின் துணை தேவைப்பட்டது.
அப்படி என் ராசாவின் மனசிலே படத்தில் தான் கமல் பார்வை வடிவேலுமீது பட்டது. இசக்கி ரோலில் நடிக்க அதன்பின் தான் கிடைத்திருக்கிறது.
புரட்டிப்போட்ட கமல்
வாய்ப்பு கொடுத்த, கமல் ஹாசன் தான் தனக்கு கடவுள் மாதிரி என்றும் தன்னிடம் இருக்கும் திறமையை நம்பி தேவர் மகன் படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்து தன் வாழ்க்கையை யூடர்ன் செய்துவிட்டார் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார் வடிவேலு.
இந்நிலையில் மாமன்னன் - ஆக நடித்த வடிவேலு தற்போது 64 வயதை கடந்துள்ளார். இந்நிலையில் 15 வருடங்களுக்கு பின் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் என்ற படத்தில் சிங்காரமாக நடிக்கவுள்ளார் வடிவேலு. அப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.
இதேபோல் வடிவேலு பிறந்தநாளான இன்று அவரின் ஃபேமர்ஸான டயலாக்கும் மீம்ஸ் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பேமர்ஸான டயலாக்
- ‘ஏன்டா! இன்னுமா இந்த ஊரு நம்பள நம்பிக்கிட்டு இருக்கு’ -வின்னர்.
- "என்ன! சின்ன புள்ளத் தனமா இருக்கு" - வின்னர்.
- "வேணாம்..வேணாம்! வலிக்குது… அழுதுடுவேன்" - வின்னர்.
- "போங்க தம்பி நாங்க அடிவாங்காத ஏரியாவே கிடையாது" - வின்னர்.
- "மாப்பு வெச்சிட்டாங்கையா ஆப்பு" - சந்திரமுகி.
- "ஏன்! நல்லாத்தானே போயிட்டிருக்கு" - சீனாதானா 001.
- "நான் அப்படியே சாக் ஆயிட்டேன்" - கிரி.
- "க க க போ…"- இம்சை அரசன் 23ம் புலிகேசி.
- "பட் எனக்கு அந்த டீலிங் புடிச்சிருக்கு" - கிரி.
- "பில்டிங் ஸ்ட்ராங்கு பேஷ்மென்டு வீக்கு" - தலைநகரம்.
- “பெண்கள் மூன்று வகை. ஜில் ஜங் ஜக்” - காதலன்.
- “பிளான் பண்ணி பண்ணனும்” - போக்கிரி.
- “எரியுதடி மாலா” - மிடில் கிளாஸ் மாதவன்.
மீம்ஸ் நாயகனின் வீடியோ
"ராயன் அடங்காத அசுரன் நான்"
— Gypsy ? (@Gypsy_1809) September 10, 2024
வடிவேலு version.
Just 4 fun ??#Raayan #Vadiveelu #Kollywood pic.twitter.com/Xn4qeTyjiO

