ஆணவத்தில் ஆல் வைத்து அடித்து ஓடவிட்டார் வடிவேலு!! உண்மையை கூறிய நடிகர் சுகுமார்

Vadivelu Gossip Today Tamil Actors Maamannan
By Edward Aug 02, 2023 07:05 AM GMT
Report

தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட் நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலு, பல ஆண்டுகள் கழித்து ரீஎண்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் தந்தையாக மாமன்னன் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.

இதனை தொடர்ந்து சந்திரமுகி 2 படத்திலும் நடித்து வரும் வடிவேலு ஆரம்பகாலக்கட்டத்தில் தன்னுடன் நடித்த சக நடிகர்களை கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறார். அதிலும் அவருடன் பல காட்சிகளில் நடித்தவர்கள் கூட வடிவேலு தங்களை வளரவிடாமல் தடுத்தவர் என்று விமர்சித்து வந்தனர்.

ஆணவத்தில் ஆல் வைத்து அடித்து ஓடவிட்டார் வடிவேலு!! உண்மையை கூறிய நடிகர் சுகுமார் | Vadivelu Beaten Sugumar Pretending To Be Himself

இந்நிலையில் காதல் படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் காதல் சுகுமார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் தனக்கு வடிவேலு செய்த மோசமான காரியத்தை பகிர்ந்துள்ளார். அதில், வடிவேலு சார் மாதிரி ஒரு படத்தில் நடித்திருந்தார். அப்போது வடிவேலுக்கு உடம்பு முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது முத்துக்காளை, போண்டா மணி என்னிடம் வந்து வடிவேலு உங்களை பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் என்றதும் உடனே நானும் சந்திக்க மருத்துவமனைக்கு சென்றே. அப்போது, என் வயித்துல பொறந்தவன் மாதிரி இருக்கான்னு என் ஆத்தா சொல்லுவாங்க, என்று வடிவேலு என்னிடம் சொன்னாரு.

அப்படி பேசிட்டு இருக்கும் போது போண்டாமணி, முத்துக்காளை வெளியில் சென்றதும், என்னை மட்டும் இருக்க சொல்லி பேசினார் வடிவேலு. ஒவ்வொரு கம்பெனியா போய், என்னை மாதிரி நடிப்பேன்னு சொல்றீங்களாமேன்னு கேட்டாரு வடிவேலு.

ஆணவத்தில் ஆல் வைத்து அடித்து ஓடவிட்டார் வடிவேலு!! உண்மையை கூறிய நடிகர் சுகுமார் | Vadivelu Beaten Sugumar Pretending To Be Himself

சினிமால நான் பண்ண மாட்டேன்னு சொன்னது இல்லையே சமீபத்தில் ஒரு படத்துல நடிச்சிங்களேன்னு கேட்டார். வாய்ப்பு வந்துச்சி வேறுவழி இல்லாம பண்ணிட்டேன்னு சொன்னேன். உடனே எதிர்த்து எதிர்த்து பேசிறியேன்னு பின்னாடி இருந்த ஒருவர் என்னை அடித்தார். ஏதோ பண்ண பாக்குறாங்க என்று நினைத்து, இனிமே எதுவும் பண்ணமாட்டேனும் ஊரைவிட்டே ஓடுறேன்னு சொல்லிட்டு கிளம்பினேன்.

ஒரு கசப்பான சம்பவம் அன்று நடந்தது. வீட்டுக்கு போனதும் என் பொண்ணாட்டி மீனா, என்ன மூஞ்சிலாம் வீங்கி இருக்குன்னு கேட்டாள். வண்டில இருந்து கீழ விழுந்துட்டேன்னு சொல்லி சமாளிச்சேன். இப்படி நடிகர் வடிவேலு தன்னிடம் நடந்து கொண்ட விசயத்தை கூறிய காதல் சுகுமாரால் கோலிவுட்டே பரபரப்பாக இருந்து வருகிறது.

மன அழுத்தத்தில் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் இருந்தேன். அப்போது என் மனைவி தான் எனக்கு ஆறுதல் கூறி தைரியம் கொடுத்தார். அதன்பின் விருமாண்டி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து என்னுடைய பொற்காலமாக மாற்றியதாக காதல் சுகுமார் தெரிவித்துள்ளார்.