ஆணவத்தில் கோவை சரளாவுக்கே ஆப்பு வைத்த வடிவேலு!! வெளிவராத உண்மை தகவல்
கவுண்டமணி,செந்தி, வடிவேலு இருந்த காலக்கட்டத்தில் பெண் காமெடி நடிகையாக திகழ்ந்தவர் மனோரம்மா. அவருக்கு அடுத்த அந்த இடத்தினை பிடித்தவர் தான் நடிகை கோவை சரளா. சிறு காமெடி ரோலில் வடிவேலுவுடன் நடித்து வந்த கோவை சரளா, பாலு மகேந்திரா இயக்கத்தில் சதிலீலாவதி படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானார்.
கமல் ஹாசனுக்கே டஃப் கொடுக்கும் வண்ணம் அவர் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது. ஆனால் அப்படத்தில் கோவை சரளாவை பாலு மகேந்திராவுக்கு சிபாரிசு செய்ததே கமல் ஹாசன் தானாம். ஆரம்பத்தில் அவர் வேண்டாம் என்று கூறி பின் கமலின் வற்புறுத்தால் அப்படத்தில் நடித்தார் கோவை சரளா.
அதன்பின் குணச்சித்திர ரோலில் அடுத்தடுத்த நடித்து வந்த கோவை சரளாவுக்கு வடிவேலுக்கும் இடையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் கோவை சரளாவின் வளர்ச்சி, வடிவேலுவுக்கு பிடிக்காமல் போனது தானாம்.
அதனால் தான் தன்னுடன் பல படங்களில் ஜோடியாக நடித்த கோவை சரளாவை இனிமேல் என் படத்தில் நடிக்க கூடாது என்று கண்டீசன் போட்டிருக்கிறார் வடிவேலு. இதனால் தான் கோவை சரளாவுக்கு அப்போது மார்க்கெட் கிடைக்காமல் ஒதுக்கப்பட்டார்.
மேலும் கோவை சரளா தெலுங்கு பக்கம் சென்று நடித்தார். ஆனால் இன்னும் அவர் தன்னுடைய சகோதரர்களின் நலனுக்காகவே திருமணம் செய்யாமல் ஒண்டிக்கட்டையாக வாழ்ந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த செம்பி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.