பண்ணைவீடு, பங்களா!! வாயைப்பிளக்க வைக்கும் வைகைப்புயலின் சொத்து மதிப்பு..

Vadivelu Net worth
By Edward Oct 21, 2024 08:30 AM GMT
Edward

Edward

in Celebrity
Report

வடிவேலு

தமிழ் சினிமாவின் காமெடி லெஜெண்ட் என்று அறியப்படும் வைகைப்புயல் வடிவேலுவின் வாழ்க்கையை புரட்டிப்போட்ட படங்களில் ஒன்றாக இருப்பது தேவர்மகன் படம் தான்.

பண்ணைவீடு, பங்களா!! வாயைப்பிளக்க வைக்கும் வைகைப்புயலின் சொத்து மதிப்பு.. | Vadivelu Details About His Net Worth

வடிவேலுவின் ஆரம்பகால வாழ்க்கையில் அவரின் திறமையை நிரூபிக்க சிலரின் துணை தேவைப்பட்டது. அப்படி என் ராசாவின் மனசிலே படத்தில் தான் கமல் பார்வை வடிவேலு மீது பட்டது.

இசக்கி ரோலில் நடிக்க அதன்பின் தான் கிடைத்திருக்கிறது. வாய்ப்பு கொடுத்த, கமல் ஹாசன் தான் தனக்கு கடவுள் மாதிரி என்றும் தன்னிடம் இருக்கும் திறமையை நம்பி தேவர் மகன் படத்தில் தனக்கு வாய்ப்பு கொடுத்து தன் வாழ்க்கையை யூடர்ன் செய்துவிட்டார் என்றும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார் வடிவேலு.

சொத்து மதிப்பு

இந்நிலையில் மாமன்னன் - ஆக நடித்த வடிவேலு தற்போது 64 வயதை கடந்துள்ள நிலையில் சுந்தர் சி படத்தில் பல ஆண்டுகள் கழித்து நடித்து வருகிறார். தற்போது வடிவேலுவின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பண்ணைவீடு, பங்களா!! வாயைப்பிளக்க வைக்கும் வைகைப்புயலின் சொத்து மதிப்பு.. | Vadivelu Details About His Net Worth

இத்தனை ஆண்டுகளாக சினிமாவில் நடித்து சம்பாதித்ததில் அவருக்கு மொத்தம் 150 கோடி ரூபாய்வரை சொத்து இருக்கிறதாம். மதுரையில் பல ஏக்கர் நிலம், சொகுசு பங்களா, சென்னையில் இரண்டு பங்களா, ஈசிஆர் பண்ணைவீடு என்று வைத்திருக்கிறாராம்.

பிஎம்டபிள்யூ உள்ளிட்ட சொகுசு கார்களையும் வடிவேலு வைத்திருக்கிறாராம். சம்பாதிக்கும் பணத்தை ரியல் எஸ்டேட்டில் அதிகளவு முதலீடு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.