12 வருடங்களுக்கு பின் நடக்கும் அதிசயம்! வைகைப்புயல் வடிவேலுவின் அதிரடி!

shooting flim Comedian
By Jon Feb 15, 2021 09:58 PM GMT
Report

வைகைப்புயல் வடிவேலும் மீண்டும் எப்போது சினிமா திரைக்கு வருவார் என்பது பலரின் கேள்வி. ரசிகர்கள் அவரை ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அண்மையில் அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு அனைவருடனும் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ரசிகர்களை மிகவும் கவர்ந்தன.

கமல் ஹாசனுடன் தலைவன் இருக்கின்றான் படத்தின் மூலம் சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் தற்போது சூர்யாவுடன் இணைந்து படத்தில் பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 நடிக்கவுள்ளாராம். 12 வருடங்கள் கழித்து இருவரும் மீண்டும் இணைகின்றனர்.

இவர்களின் நடிப்பில் வந்த ஆதவன், சில்லுனு ஒரு காதல், வேல், ஆறு ஆகிய படங்களை மறக்க முடியுமா என்ன? சூர்யா 40 படத்தின் பட பூஜை இன்று நடைபெற்றுள்ளது. பிரியங்கா மோகன், இசையமைப்பாளர் இமான், தேவ தர்ஷினி என பலரும் இதில் கலந்து கொண்டனர்.