வடிவேலு வெற்றிக்கு காரணம் நான்தான்.. அவருக்கு உரிமை இல்லை!! நடிகர் சிங்கமுத்து..

Vadivelu Gossip Today Madras High Court
By Edward Oct 03, 2024 12:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலு மீது அவருடன் நடித்த பல நடிகர்கள் சமீபகாலமாக விமர்சித்து பேசி வந்தனர்.

அதில் முக்கியமான நடிகர் சிங்கமுத்து வடிவேலுவை யூடியூப் சேனல் ஒன்றில் அவதூறாக பேசியதாக, அவர்மீது 5 கோடி கேட்டு வழக்கு கொடுத்தார் வடிவேலு.

வடிவேலு வெற்றிக்கு காரணம் நான்தான்.. அவருக்கு உரிமை இல்லை!! நடிகர் சிங்கமுத்து.. | Vadivelu Misrepresented Me To Producers Singamuthu

சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த சிங்கமுத்து, நடிகர் வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான் தான் இருந்தேன்.

நான் நடிப்பதை தடுக்கும் வகையில் என்னைப்பற்றி தயாரிப்பாளர்களிடம் தவறாக சித்தரித்து பேசினார். அவரைப்பற்றி பேட்டி அளிக்க தடை கேட்பதற்கு எந்த உரிமையும் அவருக்கு இல்லை, வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சிங்கமுத்து தரப்பில் பதில் மனு அளிக்கப்பட்டுள்ளது.