பிரபல நடிகருடன் குடித்துவிட்டு ரகளை செய்த வடிவேலு!! ஸ்பாட்டுக்கே வந்து மிரட்டிய கேப்டன் விஜயகாந்த்..
விஜயகாந்த்
மறைந்த நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நடிகராக மட்டும் இல்லாமல் தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத் தலைவராகவும் பணியாற்றி பல நன்மைகளை செய்து புகழ் பெற்றார்.
தைரியத்துக்கும் தொழில் பக்திக்கும் பெயர்போன விஜயகாந்த், சினிமாக்காரர்கள் மட்டுமில்லாமல் வேறு யாராக இருந்தலும் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் பேசவேண்டும்.
வாய்த்தவறி வார்த்தைவிட்டால் யாரென்றும் பார்க்காமல் ஆக்ரோஷமாக அடித்து துவம்சம் செய்துவிடுவார். அப்படி ஒரு சம்பவம் சுந்தரா டிராவல்ஸ் படத்தின் தயாரிப்பாளர் யுவஸ்ரீ கிரியேஷன்ஸ் தங்கராஜ் பகிர்ந்துள்ளார்.
முரளி வடிவேடி குடி, ரகளை
படப்பிடிப்பின்போது அப்படத்தில் நடித்த முரளியும் வடிவேலுவும் குடித்துவிட்டு சரியாக ஷூட்டிங்கிற்கு ஒத்துழைப்பு தாராமல் இருந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் படத்தினை கைவிட்டுவிடலாம் என்று முடிவுக்கு வந்துள்ளார் தயாரிப்பாளர்.
இதுதொடர்பாக விஜயகாந்தை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கேப்டன் விஜயகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே சென்று முரளி, வடிவேலு இருவரையும் படத்தினை ஒழுங்காக நடித்துக்கொடுக்கவில்லை என்றால், தொலைத்துவிடுவேன் என்று கடுமையாக மிரட்டியுள்ளார்.
அதன்பின் இருவரும் படத்தினை பிரச்சனை செய்யாமல் முடித்துக்கொடுத்ததாக தயாரிப்பாளர் தங்கராஜ் கூறியிருக்கிறார்.