என்னை வாழ வெச்சதே அவர்தான் ஆனா, அம்மணமா வரல.. 30 வருட ரகசியத்தை உடைத்த வடிவேலு..
வடிவேலு
தமிழ் சினிமாவின் காமெடி லெஜண்ட்டாக திகழ்ந்து வரும் நடிகர் வடிவேலு, சுந்தர் சி இயக்கத்தில் கேங்கர்ஸ் என்ற படத்தில் பல ஆண்டுகளுக்கு பின் நடித்துள்ளார்.
இப்படம் நாளை ஏப்ரல் 24 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில் பிரமோஷனுக்காக சுந்தர் சி-யுடன் பேட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். அதில் தான் இந்த இடத்திற்கு வரக்காரணம் யார் என்று 30 வருட ரகசியத்தை உடைத்துள்ளார் வைகைப்புயல்.
என்னை வாழ வெச்சதே ராஜ்கிரண்
அப்பேட்டியில், இதை நான் சொல்லியே ஆகணும். ரொம்பநாளாக இதை சொல்லவேண்டும் என்று இருந்தே. இந்த திரையுலகத்தில், என்னை 4 ஆண்டுகளாக ராஜ்கிரண் சார் ஆஃபிஸில் வைத்து, என்னை வாழ வைத்தவர் அவர்தான். ஆரம்பத்தில் நான் சினிமாவில் கேஃப் விட்ட சமயத்தில் ஊருக்கு ஒரு கல்யாணத்திற்கு ராஜ்கிரண் வந்தார்.
அந்த கல்யாணத்திற்கு கூட்டிட்டு வந்தவனோட நண்பர் என் தம்பி. அப்போது என் தம்பி, அந்த நபரிடம் ராஜ்கிரண் சாரிடம் என்னை கூட்டிச்செல்ல வேண்டும் என்று கேட்டுள்ளார். அவரும் ராஜ்கிரணிடம் கூற, வரச்சொல்லி இருக்கிறார். அப்போது ராஜ்கிரணுடன் பலர் இருக்கும் போது, நான் நடித்துக்காட்டினேன்.
அவர் ரயில் ஏறும் வரை நான் நடித்துக்காட்டினேன், ஆனால் வாய்ப்பு கேட்கவில்லை. 2 மாதம் கழித்து என்னை கூட்டிவரச்சொல்லி, என்னை வரவழைத்து அவர் ஆஃபிஸில் பார்த்துக்கொண்டார். ராஜ்கிரணுடன் நடித்த படம் ரிலீஸானப்பின் என் அப்பா இறந்துடுறாரு. அந்த படம் ரிலீஸானப்பின் உடனே உதயக்குமாரை ஒரு படத்துக்கு கூப்பிட்டு வருகிறார் ராஜ்கிரண்.
என்னோவோ பேச ஆரம்பிச்சாங்க
அதை, சினிமாவில் இருந்து வேட்டிச்சட்டையுடன், பேண்ட் சட்டையுடன் தான் வந்தேன் அம்மணமாக எல்லாம் வரவில்லை. அதையே அவர் வேட்டிச்சட்டை வாங்கி கொடுத்தாரு, டவுசர் சட்டை வாங்கிக்கொடுத்தாரு, தாலாட்டுனாங்கன்னு என்னோவோ பேச ஆரம்பிச்சாங்க.
சினிமாவில் என்னை தூக்கி நிப்பாட்டுனது ராஜ்கிரண் சார் தான். தேவர் மகன் படம் வரைக்கும் ராஜ்கிரண் சார் ஆஃபிஸில் தான் இருந்தேன். ஒன்னும் சம்பளம் எல்லாம் இல்லை. நிறைய போன் வருதுன்னு சொல்லிட்டு வேறவொரு ஆஃபிஸுக்கு சென்றேன் என்று வடிவேலு தெரிவித்துள்ளார்.