விஜய் பட வேண்டாம்!! அவர்-னா ஓகே!! உதயநிதி கேட்டும் தூக்கி எறிந்த வைகைப்புயல்
தமிழ் சினிமாவின் காமெடி ஜாம்பவனாகவும் வைகைப்புயலாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் வடிவேலு. பல ஆண்டுகள் கழித்து மிகவும் வித்தியாசமான ரோலில் மாமன்னன் படத்தில் நடித்துள்ளார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உள்ளிட்ட பல நடித்துள்ள இப்படம் வரும் 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக பிரபல ஊடகம் ஒன்றிற்கு வடிவேலு மற்றும் உதயநிதி ஸ்டாலின் இணைந்து பேட்டியொன்றினை கொடுத்து பல விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர். அப்போது வடிவேலு மாமன்னன் படத்தில் எப்படி வந்தார் என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அப்போது வடிவேலு, உதைய் சார் எனக்கு கால் செய்து பேசினார். இந்த கதைக்கு நான் நன்றாக இருக்கும் என்று மாரி செல்வராஜ் கூறியதால் உதயநிதி எனக்கு கதையை கேட்கச்சொன்னார்.
அப்போது பரியேறும் பெருமால் படத்தினை பார்த்து முடித்து உதயநிதி ஓகேவா என்று கேட்டார். அவரிடம் பிடிக்கவில்லை என்றால் உடனே சொல்லிவிடுவேன்.
அப்படிதான் குருவி படத்தில் கதையை கேட்க சொல்லி கேட்டேன். அப்படத்தில் என்னுடைய ரோல் கம்மியாக இருக்கிறது என்று உதயநிதியிடம் கூறினேன். அதற்கு ஓகே என்று சொல்லி வேறு எந்த ரியாக்ஷனும் கொடுக்கவில்லை.
அதன்பின் ரவிக்குமார் சார் படம்ன்னு சொன்னதும் ஓகே என்று உடனே ஒத்துக்கொண்டேன். அதுதான் ஆதவன் படம் என்று தெரிவித்துள்ளார். அப்படி தான் இந்த படத்தில் நடிக்க என்னை கேட்டார் உதயநிதி ஸ்டாலின் என்று கூறியுள்ளார் வடிவேலு.