உன் மாமனுக்கே நான் தான் நடிப்பு சொல்லி கொடுத்தேன்!! ரஜினியை வைத்து தனுஷை வம்பிழுத்த வடிவேலு

Dhanush Rajinikanth Vadivelu Gossip Today
By Edward Jul 28, 2023 04:45 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும் நடிப்பு அசுரனாகவும் திகழ்ந்து வரும் நடிகர் தனுஷ், தற்போது கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அப்படத்தின் தனுஷின் வெறித்தனமான புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சமீபகாலமான நடிகர் தனுஷ் தன்னை மரியாதை இல்லாமல் பேசியதால் படிக்காதவன் படத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறிவிட்டார். இதுகுறித்து நடிகர் மீசை ராஜேந்திரன் விளக்கம் கொடுத்துள்ளார்.

படிக்காதவன் படத்தின் ஷூட்டிங்கின் போது ஒரு ஷாட்டில், தனுஷை பார்த்து ஒரு டயலாக் பேச வேண்டும் என்று இயக்குனர் சிராஜ், வடிவேலுவிடம் கூறினார். ஆனால் வடிவேலு தனுஷை பார்க்காமல் திரும்பி பார்த்தார்.

உடனே இயக்குனர் கட் என்று கூறியும் வடிவேலு திரும்பி திரும்பி பார்த்ததால் 6, 8 டேக் வரை சென்றது. பின் கேமராமேன் லைட்டை மாற்றி வைத்தாராம். உடனே இயக்குனர் மைக்கை எடுத்து, அண்ணனுக்கு (வடிவேலு) நிமிஷத்துக்கு காசு போது என்னையா இப்போ போய் லைட்ட மாத்துறீங்க என்று சொன்னதும் வடிவேலு கடுப்பாகி பார்த்தாராம்.

இயக்குனர் கூறியும் அப்படி செய்ததற்கு வடிவேலு, நான் டப்பிங்கில் மைண்ட் வாய்-ஆக போட்டுவிடுறேன்னு சொல்லிட்டார். உடனே தனுஷ், வடிவேலுவிடம், டைரக்டர் சொல்றாமாதிரி செய்ங்கன்னு சொல்லிட்டாராம். உடனே தனுஷை முறைத்து கிளம்பிவிட்டாராம்.

இதை படிக்காதவன் ஷூட்டிங்கில், இவன் மாமனுக்கு நான் சொல்லி கொடுத்த, இவன் எனக்கு சொல்லித்தரான்னு அங்கிருந்தவர்கள் சொல்லியதாக எனக்கு தகவலை கூறினார்கள் என்று மீசை ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.