ரெட்கார்ட்டுக்கு பின் வடிவேலு ரீஎண்ட்ரி !! நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் எப்படி..
தமிழ் சினிமாவில் காமெடி லிஜெண்ட் என்று அழைக்கப்பட்ட நடிகர் வடிவேலு, மெர்சல் படத்தில் கடைசியாக நடித்திருந்தார். அதன்பின் இயக்குனருடன் பிரச்சனை ஏற்பட்டு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டு 4 வருடம் சினிமாவைவிட்டு விலகி இருந்தார்.
இதனால் ரசிகர்கள், மீம்ஸ் கிரியேட்டர்கள் மிகவும் வருத்ததுடன் இருந்து வந்தனர். அதையெல்லாம் தகர்த்துவிட்டு தற்போது ரெட்கார்ட் விலகி நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளார். நேற்று வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்..
கதைக்களம்
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் கதைப்படி வடிவேலுவின் அப்பாவிற்கு சித்தர் ஒருவர் ஒரு நாயை பரிசாக அளிக்க, அந்த நாயால் பல நன்மைகள் கொட்ட ஆரம்பித்துள்ளது. பல வருடமாக குழந்தை இல்லாமல் இருந்த அப்பா அந்த நாயால் தான் வடிவேலு பிறக்கிறார்.
போகிற போக்கில் அந்த நாய் செல்லப்பிராணியாக இருக்க ஒருமுறை நாயை கடத்திச்சென்று விடுகிறார்கள். அந்த நாயை எப்படியாவது கண்டுபிடிக்க வடிவேலு தேடிச்செல்கிறார். நாயை கண்டுபிடித்தாரா இடையில் எத்தனை நாய் அவரை டார்ச்சர் செய்ததால் வந்த பிரச்சனை காமெடி என்ன என்பதுதான் அதற்கு மேல் இருக்கும் டிவிஸ்ட்.
வடிவேலு ஜெய்த்தாரா
இதுபோல் பல கதையை பார்த்திருந்தாலும் சுவாரஷ்யம் இல்லாமல் அதிலும் பொறுமையை சொதிக்கும் வண்ணம் இயக்குனர் கதையை உருட்டி இருக்கிறார். வடிவேலு கதைக்கு எந்த குறையையும் வைக்கக்கூடாது என்பதற்காக மூழ் படத்தையும் முடித்துக்கொடுத்திருக்கிறார்.
விஜய் டிவி பிரபலங்களான சிவாங்கி, ராமர், பாலா ஒரு பிராப்பர்ட்டி போல் தான் படத்தில் வந்துள்ளனர். ஆனால் ஆனந்தராஜின் நடிப்பு கொஞ்சம் ஒர்க்கவுட் ஆகியுள்ளது. படம் சொல்லிக்கும் அளவிற்கு இல்லாமல் மொத்தத்தில் மீம்ஸ் கிரியேட்டர்களின் கண்டண்ட்-க்கு மட்டுமே பயன்படும்.