வைகைபுயலின் சொத்துமதிப்பு இவ்வளவு கோடியா? 43 வருட சினிமாவாச்சே சும்மாவா!

vadivelu vaigaipuyal networth
By Edward Jun 29, 2021 12:30 PM GMT
Report
153 Shares

வைகைபுயல் என்றாலே தமிழ் மக்களுக்கு ஒரு பெரிய சொத்தாகி விட்டது. அதிலும் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தெய்வமாகவும் இருக்கிறார் நடிகர் வடிவேலு. 1988ல் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் 200 படங்களுக்கு மேல் நடித்து கோடிக்கணக்கான ரசிகர்களை சிரிக்க வைத்து வந்துள்ளார் வடிவேலு.

அதுமட்டுமில்லாமல் வடிவேலு செய்யும் ஒவ்வொரு சேட்டைகளும், முகபாவனைகளும் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்ததால் பெருவாரியான இயக்குனர்களும் தங்களது படத்தில் எப்படியாவது வடிவேல் நடிக்க வைத்து விட வேண்டும் என தொடர்ந்து அனைத்து இயக்குனர்களும் வடிவேலுவுடன் பணியாற்ற ஆரம்பித்தனர்.

சில கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் நடிக்க ஆரம்பிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் வடிவேலுவின் 43 வருடகால சினிமா வாழ்க்கையில் 60 வயதை எட்டிய நிலையில் அவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ. 88 கோடி. தற்போது படங்களே இல்லாமல் இருக்கும் வடிவேலு அப்போது படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்கி இருப்பாரோ என்று ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.