வலிமை கண்டிப்பாக தியேட்டரில் தான்! விஜய் மாதிரி அஜித் கிடையாது! பிரபல தயாரிப்பாளர் ஓப்பன் டாக்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிக்கட்டி பறந்து வருபவர் நடிகர் விஜய். அல்டிமேட் ஸ்டார், தல என ரசிகர்களாலும் பிரபலங்களாலும் கொண்டாடப்படும் நடிகராக இருந்து வருகிறார். தற்போது வலிமை படத்தின் முழுப்படப்பு கூடிய சீக்கிரமே நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியது. சமீபத்தில் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகி பெரிய சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் வலிமை பற்றியும் அஜித்தை பற்றியும் தயாரிப்பாளர் ராஜன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் பேசியுள்ளார். அஜித் பெரியளவில் ஆடம்பரத்தை ஏற்காதவர். மேலும், விஜய், ரஜினிகாந்த் சம்பளத்தினை ஏற்றுவதை போல அஜித் புகழ் கிடைத்தாலே போதுமென இருப்பார். காசு முக்கியமில்லை என்று சம்பளத்தை அவர் திருப்திக்காக தான் வாங்குவார் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து வலிமை ஓடிடி தளத்தில் வெளியாகுமா இல்லை தியேட்டரிலா என்ற் கேள்விக்கு கண்டிப்பாக தியேட்டரில் தான். தியேட்டர்கள் செப்டம்பர் மாதம் திறக்கப்படும்.
நவம்பரில் வலிமை வெளியாகும் என திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தியேட்டரில் தான் வலிமை வெளியிட படக்குழு ஆசைப்படுகிறார். அஜித் அவர்களின் ரசிகர்கள் பெரும்பாலானோர் ஏழைகள் என்பதால் தியேட்டரில் தான் வெளியிட முடிவெடுத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.