திருமணத்திற்கு முன்பே குழந்தை இருக்கும் இயக்குனருடன் காதல்!! இரண்டாம் திருமணம் செய்யாத பானுபிரியா
தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த டாப் நடிகைகளில் ஒருவர் நடிகை பானுப்ரியா. தன்னுடைய காந்தக்கண்ணால் 90ஸ் கிட்ஸ்களை கவர்ந்தவர் தற்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கிறார். தனுஷின் 3 படத்தில் அவருக்கு அம்மாவா நடித்த பானுப்ரியா, கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்தில் சத்யராஜின் மனைவியாகவும், பொங்கல் அன்று வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் அம்மா ரோலில் சில காட்சியில் நடித்தார்.
இதனை தொடர்ந்து பானுபிரியா பற்றிய சில தகவல் இணையத்தில் பகிரப்பட்டு வந்தது. 1998ல் ஆதர்ஷ் கவுசல் என்ற வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்ட பானுபிரியா, ஒரே வருடத்தில் ஒரு மகள் இருக்கும் நிலையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டார். சென்னைக்கு வந்த பானுபிரியா, பெற்றோருடன் இருந்து மகளை வளர்ந்தார்.
திருமணத்திற்கு முன் மூத்த இயக்குனரான வம்சியை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட பானுபிரியா அந்த காதல் ஏன் திருமணத்தில் முடியவில்லை என்று இயக்குனர் வம்சியே பேட்டியொன்றில் தெரிவித்திருக்கிறார். அதில், வம்சி இயக்கத்தில் பானுபிரியா நடித்த போது இருவருக்கும் இடையில் நல்ல உறவு ஏற்பட்டு காதலாக மாறியிருக்கிறது. வம்சிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருபது தெரிந்து காதலித்தார் பானுபிரியா.
இரண்டாம் திருமணம் செய்து கொள்ளவும் வம்சி தயாரான நிலையில், பெற்றோர்கள் சம்மதுக்கவில்லை. குறிப்பாக பானுபிரியாவின் தாயார் திருமணம் செய்து வைக்க கூடாது என்ற நிலையில் உறுதியாக இருந்துள்ளாராம்.
பானுபிரியாவை கட்டாயப்படுத்தி இயக்குனர் வம்சியிடம் இருந்து தயார் பிரித்ததாகவும், இதற்கு காரணம் வம்சி ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதும் தான் காரணம் என்று பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.. பின் அமெரிக்க தொழிலதிபருடன் பானுபிரியாவை திருமணம் செய்து வைத்ததாகவும் ஒரே ஆண்டில் அந்த திருமணம் முடிவுக்கு வந்துவிட்டது குறிப்பித்தக்கது.