ரசிகர்களை மயக்க வாணி போஜன் பயன்படுத்தும் அந்த விஷயம்!..
Vani Bhojan
Tamil Actress
Actress
By Dhiviyarajan
செய்தி வாசிப்பாளராக இருந்த வாணி போஜன் தெய்வமகள் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து இவர் 2020 -ம் ஆண்டு வெளியான "ஓ மை கடவுளே" என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.
இப்படத்தை தொடர்ந்து இவருக்கு பிரபல நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தற்போது வாணி போஜன் பகைவனுக்கு அருள்வாய், கேசினோ, பாயும் ஒளி நீ எனக்கு போன்ற படங்களை லைன் அப் வைத்துள்ளார்.
இந்நிலையில் வாணி போஜன் முகத்தை பொலிவாக வைத்திருக்க பயன்படுத்தும் அழகு குறிப்புகளை நாம் பார்க்கலாம். இவர் முகத்தை பொலிவாக வைத்துக்கொள்ள தினமும் இளநீர் எடுத்து கொள்வாராம். மேலும் முகம் இளமையாக இருக்க யோகா போன்றவற்றை செய்வாராம். இவர் ஜூஸ்களில் சர்க்கரை சேர்த்து கொள்ளமாட்டாராம்.