தப்பா பேசுனாங்க, என்னால அந்த நடிகைக்கு நடந்த விஷயம்!! வாணி போஜன் ஓப்பன் டாக்..
வாணி போஜன்
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பின் திரைப்பட வாய்ப்புகளை பெற்று உச்ச நடிகையாக மாறியவர்கள் வரிசையில் இருப்பவர் நடிகை வாணி போஜன். தெய்வமகள் சீரியலில் நடித்து சின்னத்திரை நயன் தாரா என்று கூறப்பட்ட வாணி போஜன், ஓ மை கடவுளே படத்தில் நடிக்க ஆரம்பித்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் சினிமாவில் பெரிய ஹீரோயின் சின்ன ஹீரோயின் என்ற பாகுபாடு இருப்பது குறித்து பேசியுள்ளார்.
பெரிய ஹீரோயின் சின்ன ஹீரோயின்
அதில், நிச்சயமாக இருக்கு, ஆனால் ஏன் இந்த பாகுபாடு இருக்கு என்று தெரியல. இருந்தாலும் மிகப்பெரிய நடிகையாக வரணும்னா ஆதுக்கு நிச்சயமா ஒரு கடுமையான உழைப்பு தேவை. வெறும் நடிப்பை மட்டும் நம்பி நடிச்சா பெரிய நடிகையாக முடியாது. அதுக்கான சில திறமைகளையும் நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
கொஞ்சம் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து சிறப்பாக நடித்தால் நிச்சயம் பெரிய நடிகையாகலாம், அதுமட்டுமின்றி கொஞ்சம் லக் வேண்டும். நமக்கு வரும் எல்லா படத்திலும் நடிக்கணும், நல்ல சம்பாதித்து கார் பங்களா வாங்கி செட்டிலாக வேண்டும் என்று நான் எப்போதும் நடித்தது கிடையாது. எனக்கு நகுந்த கதைகளை தேர்வு செய்து தான் நடித்து வருகிறேன்.
ரித்திகா
அப்படித்தான் இயக்குநர் ஒருவர் போனில் எனக்கு ஒரு கதையை சொன்னார். அந்த கதையை கேட்டுவிட்டு இது எனக்கு செட்டாகாது வேண்டாம் என்று கூறிவிட்டேன்.
அந்த கதையை அந்த இயக்குநர் ரித்திகா சிங்கிடம் சொல்லி இருக்கிறார். அது எனக்கு தெரியாது, அந்த கதை கேட்ட ரித்திகா, ஓகே சொல்லிவிட்டதாக என் தோழி எனக்கு கால் செய்து திட்டினால்.
அதன்பின் அந்த இயக்குநரிடம் சென்று கதையை கேட்டதில் நன்றாக இருந்து ஓகே என்று கூறினேன். ஆனால் அன்று ரித்திகாவுக்கு அட்வான்ஸ் கொடுத்திருக்க வேண்டியது என்று அவர் என்னிடம் சொன்னதும் வருத்தப்பட்டேன். அப்படி பலமுறை நடந்துள்ளது என்று வாணி போஜன் தெரிவித்துள்ளார்.
கமெண்ட்ஸ்கள்
மேலும், சோசியல் மீடியாவில் மோசமான செய்திகள் கமெண்ட்ஸ்கள் சில நேரம் பார்க்கும் போது ஆத்திரமாக இருக்கும். என்னோ கூடவே இருந்து பார்த்த மாதிரி ப்லா விஷயங்களை தப்பா எழுதுவார்கள், பேசுவார்கள். அதைப்பார்க்கும் போது வருத்தமாக இருக்கும், ஆனால் அதையெல்லாம் நான் கடந்து வந்துவிட்டேன் எழுதுறியா எழுது, பேசுறியா பேசு, நான் ஹாப்பியாகத்தான் இருக்கிறேன் என்று பதிலடி கொடுத்துள்ளார்.