லிவ்விங் டு கெதர் வாழ்க்கைக்கு முடிவு கட்டிய சின்னத்திரை நயன் தாரா.. ஏமாற்றத்தில் பிரபல நடிகர்..
வாய்ப்பை இழக்கும் நிலை
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் அறிமுகமாகி கலக்கி கொண்டிருக்கும் பிரபலங்கள் எக்கச்சக்கம். அதில் ஒருவராக செய்தி வாசிப்பாளராக இருந்து பின் பிரபல தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியல் மூலமாக பாப்புலர் ஆனவர் வாணி போஜன்.
தற்போது அந்த சீரியலை கலைஞர் டிவியில் மறு ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். வாணி போஜன் அதன் பிறகு சினிமாவில் களமிறங்கி நடித்து வருகிறார். விக்ரம் - துருவ் நடித்து இருந்த மஹான் படத்தில் வாணி போஜன் ஒரு ரோலில் நடித்து இருந்தார்.
ஆனால் அந்த பகுதிகள் முழுவதுமாக நீக்கிவிட்டார்கள். படத்தின் நீளத்தை குறைக்க அப்படி செய்துவிட்டார்கள். அதனால் வாணி போஜன் கடும் அதிர்ச்சி அடைந்தார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் வாணி போஜன் தனது போட்டோஷூட் ஸ்டில்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
பிரேக்கப் செய்த வாணி
இப்படியிருக்கையில் வாணி போஜனை தேடி கதை கூற போகும் இயக்குனர்கள் அவருடன் நடிகர் ஜெய் எப்போதும் கூடவே இருப்பதாக தெரிவித்து வந்தனர்.
இருவரும் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் இருந்து வருவதாகவும் கூறப்பட்டது. இதனால் வாணி போஜனிடம் கதை கூற தயங்கி வருகிறார்களாம்.
இந்நிலையில் இப்படி பல வாய்ப்புகள் தட்டிபோவதால் வாணி போஜன் நடிகர் ஜெய்யை பிரேக்கப் செய்துள்ளதாக தெரிகிறது. இருவரும் படங்களில் கவனம் செலுத்த முடிவெடுத்துள்ளார்களாம்.