ரோஜாவுக்கு என்ன தகுதி இருக்கு.. கடுமையாக விமர்சித்த வனிதா விஜயகுமார்..

Roja Cooku with Comali Vanitha Vijaykumar
By Karthick Raja May 20, 2026 03:30 AM GMT
Report

குக் வித் கோமாளி சீசன் 7 சமீபத்தில் தொடங்கியது. இந்த முறை போட்டியாளர்கள் கணவன் மனைவி என ஜோடியாக பங்கேற்றுள்ளனர்.

இதுவரை நடந்த போட்டிகளில் நிஷா - ரியாஸ் ஜோடி எலிமினேஷன் செய்யப்பட்டுள்ளனர். மேலும் தற்போது 7 ஜோடிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது.

ரோஜாவுக்கு என்ன தகுதி இருக்கு.. கடுமையாக விமர்சித்த வனிதா விஜயகுமார்.. | Vanitha Criticizes Actress Roja In Cwc

குக் வித் கோமாளி 7 நிகழ்ச்சியின் புதிய நடுவராக நடிகை ரோஜாவை கொண்டு வந்திருக்கின்றனர். இந்த நிலையில், அதை தற்போது வனிதா விஜயகுமார் விமர்சித்து பேசியுள்ளார்.

"ரோஜா என் பிரென்ட் தான். ஆனால் அந்த நடுவர் இருக்கையில் அமர என்ன தகுதி இருக்கு என்கிற கேள்வி இருக்கிறது. செஃப் தாமுவுக்கு பிறகு அந்த சீட்டில் அமர தகுதியானவர் நான் தான்" என வனிதா பேட்டி அளித்திருக்கிறார்.