வனிதா பையனா நீங்க! நான் அவரோட பையன் ப்ரோ! அதிர்ச்சியளித்த வனிதா மகனின் பதில்..

Vanitha Vijaykumar
By Edward May 25, 2022 09:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் சில ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் பேசும் பொருளாக மாறியது நடிகை வனிதாவின் திருமண விவகாரம். ஏற்கனவே இரு திருமணம் செய்து பின் பீட்டர் என்பவரை திருமணம் செய்தார்.

திருமணமாகி அடுத்த சில நாளே பீட்டர்பாலின் சுயரூபம் தெரியவந்து அவரையும் பிரிந்தார் வனிதா. இதன்பின் பிக்பாஸ், குக்வித் கோமாளி என பிஸியாகவும் சில படங்களிலும் நடித்து வந்தார்.

யூடியூப் சேனலிலும் சமுகவலைத்தளத்திலும் ஆக்டிவாக இருக்கும் வனிதா சமீபத்தில் தன் மகன் ஸ்ரீஹரி பிறந்தநாளுக்கு புகைப்படத்துடன் வாழ்த்தினை தெரிவித்துள்ளார். இதனை கண்ட நபர் ஒருவர், நீங்க வனிதா மகனா ப்ரோ என கேட்டார்.

அதற்கு ஸ்ரீஹரி, நான் ஆகாஷ் பையன் ப்ரோ என்று பதிலடி கொடுத்தார். வனிதாவின் முதல் கணவர் ஆகாஷிற்கு பிறந்த மகன் தான் ஸ்ரீஹரி. அதனால் தான் வனிதா மகன் அப்படியான பதிலை கொடுத்துள்ளர்.

இதிலிருந்து வனிதாவுக்கு ஆகாஷிற்கு இடையில் பேச்சு வார்த்தை இல்லை என்பது தெரிகிறது என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

Gallery