மகனே வனிதாவை வெறுத்துவிட்டான்!! பயில்வான் சொன்ன புது தகவல்..

Ilayaraaja Vanitha Vijaykumar Gossip Today Bayilvan Ranganathan
By Edward Jul 18, 2025 09:45 AM GMT
Report

வனிதா விஜயகுமார்

நடிகை வனிதா விஜயகுமார் இயக்கி நடித்துள்ள மிஸஸ் அண்ட் மிஸ்டர் படம் சமீபத்தில் ரிலீஸானது. படத்தின் பயன்படுத்திய ராத்திரி சிவராத்திரி பாடலை அனுமதியின்றி பயன்படுத்தியதாக இசைஞானி இளையராஜா வழக்கு பதிவு செய்தார்.

ஆனால் நாங்கள் இளையாராஜாவை சந்தித்து அனுமதி வாங்கியும் ஆசிவாதம் பெற்றும் தான் படத்தில் அந்த பாடலை பயன்படுத்தினோம் என்றும் இளையராஜா வீட்டு மருமகளாக போகவேண்டியவள் நான் என்றும் வனிதா கூறியிருந்தார். இதுதொடர்பாக வனிதா பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகனே வனிதாவை வெறுத்துவிட்டான்!! பயில்வான் சொன்ன புது தகவல்.. | Vanitha Son Srihari Has Reportedly Hated

கடும்கோபத்தில் இருந்த வனிதா, இப்போ என் மேல கேஸ் போட்டிருக்காருன்னா அவரோட சொந்த பொண்னு பவதாரணிக்கும் இதே நிலைமை தானா? நான் இதற்கு மேல் பேசினா பல விஷயத்தை சொல்லிவிடுவேன், அசிங்கமா போய்விடும் என்று வனிதா கோபத்துடன் பதிலளித்துள்ளார்.

மகனே வனிதாவை வெறுத்துவிட்டான்

இந்நிலையில், வனிதா பற்றி பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு விஷயத்தை பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், வனிதா முதலில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் ஜெமினி கணேசன் போல் இருப்பார். அவர்களுக்கு ஸ்ரீஹரியும் ஜோவிகாவும் பிறந்தனர்.

மகனே வனிதாவை வெறுத்துவிட்டான்!! பயில்வான் சொன்ன புது தகவல்.. | Vanitha Son Srihari Has Reportedly Hated

அந்த திருமண முறிவுக்கு தன் தந்தை விஜயகுமார் தான் காரணம் என்று சொல்லி பெரிய குண்டை போட்டார். தொடர்ந்து செய்த திருமணங்களில் இருந்து வெளியே வந்துவிட்டார். பிள்ளைகளை பொறுத்தவரை தாய் வனிதாவுடன் ஜோவிகா வந்துவிட்டார்.

ஸ்ரீஹரியோ தனது தந்தையுடன் இருக்கிறார். ஹரியிடம் சென்று வனிதா பற்றி கேட்டால் அவர் முகத்தை திருப்பிக்கொள்வார். பெற்ற மகனே வனிதாவை வெறுத்துவிட்டதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.