விஜய் மற்றும் உதயநிதி இருவரில் யார்.. வனிதா என்ன இப்படி சொல்லிட்டாரு

Udhayanidhi Stalin Vijay Tamil Cinema Vanitha Vijaykumar
By Bhavya Nov 10, 2024 08:30 AM GMT
Report

வனிதா

நடிகர் விஜயகுமாரின் மகளான வனிதா, இளம் வயதில் நடிக்க தொடங்கியவர், இடையில் காணாமல் போன இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

விஜய் மற்றும் உதயநிதி இருவரில் யார்.. வனிதா என்ன இப்படி சொல்லிட்டாரு | Vanitha Talk About Vijay Politics

இவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளார். இதில், மூத்த மகள் ஜோவிகா பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொண்டு பிரபலமானார். பிக்பாஸ் பிறகு வனிதா புதிய தொழில் தொடங்கி பிஸியாக இருந்தாலும் படங்களிலும் நடித்து வருகிறார்.

வனிதா பேட்டி

இந்நிலையில், தஞ்சை பெரிய கோவிலில் சுவாமி தரிசனம் செய்த வனிதா அங்கு செய்தியாளர்களை சந்தித்து சில விஷயங்கள் குறித்து பேசியுள்ளார்.

அதில், "ராஜ ராஜ சோழகன் கதைகளை படத்தில் பார்த்து இருக்கிறேன், படித்து இருக்கிறேன் ஆனால் முதன் முறையாக நேரில் பார்க்கிறேன் ஒரு திருமணத்திற்காக இங்கு வந்தேன் அப்படியே கோவிலை பார்த்துவிடலாம் என்று வந்தேன்.

விஜய் மற்றும் உதயநிதி இருவரில் யார்.. வனிதா என்ன இப்படி சொல்லிட்டாரு | Vanitha Talk About Vijay Politics

என் மகள் ஜோவிகா தயாரித்து நான் முதன் முதலாக இயக்கி இருக்கும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த நேரத்தில் இந்த கோவிலுக்கு வந்ததை நான் என் முன்னோர்கள் எனக்கு கொடுக்கும் ஆசிர்வாதமாக நினைக்கிறேன்.

மேலும், விஜய் மற்றும் உதயநிதி இருவரும் சினிமாவில் இருந்து தான் அரசியல் சென்றுள்ளனர். இவர்கள் இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள் அதனால் நல்ல தமிழகம் அமைவதற்கு யார் வந்தாலும் எனக்கு மகிழ்ச்சி தான்" என்று கூறியுள்ளார்.