அர்ச்சனா சுயநலவாதி, சூழ்ச்சி செய்பவர்.. மோசமாக பேசிய பிக் பாஸ் போட்டியாளர்

Kamal Haasan Archana Bigg Boss Vanitha Vijaykumar
By Dhiviyarajan Jan 10, 2024 04:00 PM GMT
Report

பிக் பாஸ் போட்டியாளர்களை ஏதாவது சொல்லி விமர்சனம் செய்வதை வழக்கமாக வைத்து இருக்கிறார் வனிதா. இந்த சீசனில் அவரது மகளை தவிர மற்ற போட்டியாளர்களை மோசமாக விமர்சனம் செய்து இருந்தார்.

பிக் பாஸ் சீசன் 7 இறுதி கட்டத்தை நெருங்கிய நிலையில் வனிதா அர்ச்சனா மற்றும் விஷுனு குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் பேசுகையில், விஷ்ணுவை பொறுத்தவரை அவன் எந்த இடத்தில் எப்படி நடந்து கொண்டான், என்ன மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்தினான் என்பது அனைத்தும் வெளியே வந்துவிட்டது. இந்த பிக் பாஸ் சீசன் கேம் சேஞ்ஜராக பார்க்கப்படக்கூடிய அர்ச்சனா உடைய முகத்திரையும் கிழிந்துவிட்டது.

அர்ச்சனா சுயநலவாதி, சூழ்ச்சி செய்பவர்.. மோசமாக பேசிய பிக் பாஸ் போட்டியாளர் | Vanitha Vijayakumar Criticize Archana

ஒரு நிகழ்ச்சி சுமாராக சென்று கொண்டு இருக்கும் போது அந்த நிகழ்ச்சியை சுவாரசியமாக மாற்றுபவரை தான் நாம் கேம் சேஞ்சர் என்று சொல்லுவோம். ஆனால் அர்ச்சனாவை பொருத்தவரை இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் நாசம் செய்து கொண்டு இருக்கிறார். அர்ச்சனா ஒரு சுயநலவாதி, சூழ்ச்சி செய்பவர், ட்ராமா செய்து கொண்டு இருப்பவள் என்று வனிதா கூறியுள்ளார்.