நீங்க எதை திங்குறீங்க...ஏதாது சொல்லிடப்போறேன்!! காட்டமாக பேசிய நடிகை வனிதா..
வனிதா விஜயகுமார்
நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா விஜயகுமார் தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும் தன்னுடைய மகளின் எதிர்காலம் குறித்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
சமீபத்தில் வனிதா அளித்த பேட்டியொன்றில், யார் வேண்டுமானாலும் சேனல் ஓபன் செய்யலாம், யார் வேண்டுமானாலும் ஒரு படத்தை பற்றி தவறாக சொல்லலாம், அந்த நெகட்டிவ் விமர்சனங்கள் சொல்பவர்கள் அதன்மூலம் சம்பாதிக்கலாம்.

ஆனால் கோடிகோடியாக பணம் போட்டு அந்த படத்தை எடுத்தவர்களுக்கு எவ்வளவு பாதிப்பு வரும், அவர்கள் எல்லாம் என்ன சாப்பிடுவார்கள் என்று தெரியவில்லை. வேறு ஏதோ சொல்லிவிடப்போகிறேன். பர்சனலாக சில விஷயங்களை பற்றியெல்லாம் நான் எங்கும் பேசுவதில்லை.
ஏனென்றால் நீங்கள் ஹேப்பியா? நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று தெரிந்தால் போதும். ஆனால் நான் எதனால் ஹேப்பியாக இருக்கிறேன் என்று நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற மனநிலையில் நான் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். வனிதா கூறியது விமர்சகர் ப்ளூ சட்டை மாறனைத்தானோ என்று கூறி வருகிறார்கள்.