பவன் கல்யாணா? பவர் ஸ்டாரா? கல்யாண சர்ச்சைகளுக்கு காமெடியாக பதிலளித்த வனிதா விஜயகுமார்.

Vanitha Vijaykumar Pawan Kalyan Gossip Today Marriage
By Edward Aug 20, 2024 05:30 AM GMT
Report

வைஜெயந்தி ஐபிஎஸ்

நடிகை வனிதா விஜயகுமார், பிக்பாஸ் மற்றுக் குக் வித் கோமாளி நிகழ்ச்சிகளுக்கு பின் பல படங்களில் நடித்து வருகிறார். பிரசாந்த், சிம்ரன் நடிப்பில் தியாகராஜன் இயக்கத்தில் அந்தகன் படத்தில் முக்கிய ரோலில் வனிதா நடித்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். தற்போது வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தில் புதுமுக இயக்குனர் மனோஜ் கார்த்திக் காமராஜி என்பவர் இயக்கத்தில் நடித்துள்ளார்.

பவன் கல்யாணா? பவர் ஸ்டாரா? கல்யாண சர்ச்சைகளுக்கு காமெடியாக பதிலளித்த வனிதா விஜயகுமார். | Vanitha Vijaykumar Talk About Pawan Kalyan Issue

இப்படத்தினை ஜென் சினிமாஸ் நிறுவனம் தயரிப்பில் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், வைஜெயந்தி ஐபிஎஸ் படத்தி இசை வெளியீட்டு நிகழ்ச்சி நடந்துள்ளது. நிகழ்ச்சியில் பேசிய பவர் ஸ்டார் சீனிவாசன், என் தோழி வனிதா விஜயகுமாரை பார்த்து ரொம்பநாள் ஆகிவிட்டது என்று பேசியிருந்தார்.

பவன் கல்யாணா? பவர் ஸ்டாரா?

அதன்பின் வனிதா உங்கள் தோழியா? உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்களே? என்று பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டுள்ளார். உடனே வனிதா, ஆந்திராவில் நீங்க பவன் கல்யாணை திருமணம் செய்துவிட்டீர்களா? என்று கேட்கிறார்கள். அதற்கு நான் பவர் ஸ்டார் சீனிவாசனை தான் திருமணம் செய்திருக்கிறேன் என்று ஜாலியாக கூறியதாக வனிதா தெரிவித்துள்ளார்.