3000 ஏக்கர்...அனந்த் அம்பானியின் வந்தாரா வனவிலங்கு மறுவாழ்வு மையம்!! திறந்து வைத்த பிரதமர்..
அனந்த் அம்பானியின் ’வந்தாரா’
முகேஷ் அம்பானி குடும்பத்தினர் தொழில் விஷயத்தில் பலவற்றை செய்து வருவதை போன்று சில தொண்டு நிறுவன மையங்கள் மூலம் பலருக்கும் உதவி செய்து வருகிறார்கள்.
அப்படி முகேஷ் அம்பானியின் இளைய மகன் அனந்த் அம்பானி, அழிந்துவரும் வன விலங்குகளை காக்கும் விதமாக குஜராத்தின் ஜாம் நகரில் ’வந்தாரா’ என்ற வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை நிர்வகித்து வருகிறார்.
3000 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இருக்கும் வந்தாரா என்ற இந்த விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளை, வந்தாரா சர்வதேச விலங்குகள் அமைப்பான இன்டர்நேஷனல் யூனியன் ஃபார் கன்சர்வேஷன் நேச்சர் (IUCN), உலக வன விலங்குகள் நிதியம் (WWF) ஆகிய அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடி
இந்நிலையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் வந்தாரா வனவிலங்கு மையத்தை திறந்து பின் பார்வையிட்டுள்ளார். மேலும், வன விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்தார்.
இங்கு, வந்தாரா சுற்றுச்சூழல் அமைப்பு 200க்கும் மேற்பட்ட யானைகள், சிறுத்தைகள், புலிகள், சிங்கங்கள், ஜாகுவார் போன்ற 300க்கும் மேற்பட்ட பெரிய பூனைகள், மான்கள் போன்ற 300க்கும் மேற்பட்ட தாவர உண்ணிகள் மற்றும் முதலைகள், பாம்புகள் மற்றும் ஆமைகள் போன்ற 1,200க்கும் மேற்பட்ட ஊர்வனவற்றிற்கு புதிய வாழ்க்கையையும் நம்பிக்கையையும் தனக்கு கொடுப்பதாக அனந்த் அம்பானி சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.
PM @narendramodi inaugurated and visited the wildlife rescue, rehabilitation, and conservation centre in Vantara, #Gujarat. #Vantara is home to more than 2,000 species and over 1.5 lakh rescued, endangered, and threatened animals. PM explored various facilities at the centre and… pic.twitter.com/bRfbBTAybl
— DD News (@DDNewslive) March 4, 2025

