சூர்யா பட நடிகையை தொடர்ந்து சரத்குமார் மகளையும்புக் செய்த தனுஷ்!! எகிறும் பெரிய லிஸ்ட்..

Dhanush Aparna Balamurali Varalaxmi Sarathkumar Dushara Vijayan
By Edward Feb 27, 2024 10:30 AM GMT
Report

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட், ஹாலிவுட் சினிமாத்துறைக்களுக்கு சென்று தன் திறமையை காட்டி வருகிறார் நடிகர் தனுஷ். கேப்டன் மில்லர் படத்திற்கு பின் ராயன் மற்றும் வேறொரு படம் உள்ளிட்ட இரு படங்களை இயக்கி வரும் தனுஷ், இயக்குனர் சேகர் கம்முலா கூட்டணியில் நடித்து வருகிறார்.

இந்த கூட்டணியின் டைட்டில் தற்காலிகமாக DNS என்று வைத்துள்ளனர். இந்நிலையில் தனுஷ் இயக்கி நடிக்கும் ராயன் படத்தில் எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ், சந்தீப் கிஷன், பிரகாஷ்ரா, அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்டவர்கள் முக்கிய ரோலில் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் தற்போது தனுஷ் மேலும் ஒரு நடிகையை ராயன் படத்திற்காக புக் செய்திருக்கிறார். நடிகர் சரத்குமாரின் மகளான நடிகை வரலட்சுமி சரத்குமார் தான் அந்த நடிகை.

ஏற்கனவே தேசிய நடிகை அபர்ணா பாலமுரளி, சிறப்பான நடிகை துஷாரா விஜயன் நடிக்க கமிட்டாகியதை தொடர்ந்து வரலட்சுமியும் இந்த கூட்டணியில் இணைந்திருப்பது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்திருக்கிறார்.

இப்படியொரு பிரம்மாண்ட கூட்டணியை வைத்து தனுஷ் எப்படி படம் எடுக்க போகிறார் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.