ஹீரோ, தயாரிப்பாளர், டைரக்டருடன் படுத்து தான் பட வாய்ப்பு வாங்கணுமா?.. சரத்குமாரின் மகளுக்கே இந்த நிலைமையா
தமிழ் திரைத்துறையில் முக்கியமான இடத்தை பிடித்தவர் சரத்குமார். இவரின் மகள் வரலட்சுமியும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இவர் தளபதி விஜய்யின் சர்க்கார் படத்தில் வில்லி ரோலில் நடித்து ரசிகர்கள் கவனத்தை தன் பக்கம் திருப்பினார்.
தற்போது வரலட்சுமி சரத்குமார் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலைமையா?
சமீபத்தில் பேட்டி அளித்த வரலட்சுமி சரத்குமார், " சினிமா துறையில் பட வாய்ப்பு வேண்டும் என்றால் டைரக்டர், ஹீரோ, தயாரிப்பாளர் போன்றவர்களுடன் படுக்க வேண்டும் என்ற சொல்வார்கள். எனக்கு அவர்களுடன் படுத்தால் தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்றால் அந்த வாய்ப்பு எனக்கு வேண்டாம்".
"நான் இரவு தூங்கும் போது நிம்மதியாக இருக்க வேண்டும். என்னுடைய முயற்சியால் மட்டும் தான் முன்னேற வேண்டும்" என்று கூறியுள்ளார். தற்போது இவரின் இந்த பேட்டி பலரையும் அதிர்ச்சி அடையவைத்துள்ளது.
