அதைபற்றி கேட்ட பத்திரிக்கையாளர்கள்! கடும்கோபத்தில் பதிலடி கொடுத்த சரத்குமார் மகள் வரலட்சுமி..

news heroine varalaxmi
By Jon Mar 08, 2021 11:35 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் சரத்குமார். தனக்கு பின் தன் மகள் வரலட்சுமி சரத்குமாரும் வாரிசு நடிகையாக அறிமுகப்படுத்தியுள்ளார். போடா போடி படத்தின் மூலம் அறிமுகமாகி நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கு படங்கள் தற்போது நடித்து வருகிறார் வரலட்சுமி.

சமீபத்தில், வரலட்சுமி கடந்த மார்ச் 5ஆம் தேதி தன்னுடைய 36வது பிறந்த நாளான்று சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கு பரிசுப் பொருள்களை வழங்கி கொண்டாடினார். அதன்பின், ‘கல்யாணம் எப்போ?’ என்று செய்தியாளர் கேட்டதும் சட்டென்று கடும் கோபம் அடைந்தார்.

அப்போது பேசிய வரலட்சுமி, திருமணம் என்பது பெண்களுக்கு அவசியமானதுதான். ஆனால் ஆண்களுக்கு ஒரு கொள்கை இருப்பது போல, பெண்களுக்கும் சில கொள்கைகள் இருக்கக் கூடாதா? எனவே இதுபோன்ற கேவலமான கேள்விகளை இனி யாரிடமும் கேட்காதீர்கள்! என்று காரசாரமாக பதிலளித்து அங்குள்ள அவர்களை வாயடைக்கச் செய்தார்.