ரஞ்சிதமே பாடலை பாடிய பாடகி MM மானசியா இது!! இப்படி மாறிட்டாங்க..
பாடகி MM மானசி
தமிழ் சினிமாவில் டாப் பாடகியாகவும் பல நடிகைகளுக்கு டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருந்து பிரபலமானவர் தான் MM மானசி. இசையமைப்பாளர்கள் வித்யாசாகர், ஜிவி பிரகாஷ் குமார், தமன், யுவன் சங்கர் ராஜா, தேவி ஸ்ரீ பிரசாத் உள்ளிட்ட பலரின் இசையில் பாடி பிரபலமானார்.
தமன்னா, சமந்தா, காஜல் அகர்வால், சுனைனா, நயன் தாரா, திரிஷா உள்ளிட்ட பல நடிகைகளின் குரலுக்கு டப்பிங் கொடுத்துள்ளார். பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்கும், வாரிசுடு படத்தில் மாளவிகா மோகனுக்கும், கோட் படத்தில் மீனாட்சி செளத்ரிக்கும் வாய்ஸ் கொடுத்துள்ளார்.
வாரிசு படத்தில் ரஞ்சிதமே பாடலை பாடியும் அசத்தி இருக்கிறார் மான்சி. அபினேஷ் விஜயகுமார் என்பவரை திருமணம் செய்து ஒரு குழந்தையும் பெற்றார் மானசி.
தற்போது பல படங்களில் பாடியும் ஆல்பம் பாடலில் பாடியும் வருகிறார். சமீபத்தில் அவர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவும் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.