தெலுங்கு இயக்குனரை நம்பி ஏமாந்து போன விஜய், சிவகார்த்திகேயன்!! தலைத்தெறிக்க ஓடும் இயக்குனர்கள்..
முன்பெல்லாம் மற்ற மொழி படங்களை வைத்து தான் தமிழ் படங்களை வைத்து ரீமேக் எடுப்பார்கள். அதேபோல் அக்கடத்தேசத்து நடிகைகள் தமிழ் சினிமாவில் அறிமுகமாவது சகஜமாகியது.
தற்போது தமிழ் நடிகர்கள் அக்கடதேசத்து பக்கம் சென்று அக்கடதேசத்து இயக்குனர்கள் தமிழ் நடிகர்களின் படங்களை இயக்குவதுமாக ஆரம்பித்துவிட்டனர்.

அதில், முதலில் என்னை ஊற்றியவர் சிவகார்த்திகேயன், விஜய், தனுஷ். இவர்கள் நடிப்பில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், விஜய்யின் வாரிசு, தனுஷின் வாத்தி போன்ற படங்கள் தெலுங்கு இயக்குனர்களால் இயக்கப்பட்டு வெளியானது.
ஆனால் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறாமல் அடிவாங்கியது.
வரிசையாக தமிழ் ஹீரோக்களின் படங்கள் மண்ணைக்கவ்வியதால் இனிமேல் தங்கள் ஊர் ஹீரோக்கள் தான் முக்கியம் என்று தெலுங்கு இயக்குனர்களும் தமிழ் நடிககளை கைகழுவிட்டார்களாம்.

அதேபோல் நம்ம ஊர் இயக்குனர்களையே நம்பலாம் என்ற முடிவுக்கும் நம்ம நடிகர்கள் எடுத்துவிட்டார்களாம். இந்த படங்கள் தெலுங்கிலும் படுதோல்வியை அடைந்ததால் உள்ளூர் ஹீரோக்களை பகைத்துக்கொள்ள வேண்டாம் என்று அங்கிருக்கும் தயாரிப்பாளர்களும் முடிவெடுத்துவிட்டார்களாம்.