வாரிசு கதை விஜய்க்கு எழுதுனது இல்லையா? தூக்கி எறிந்த மூன்று டாப் தெலுங்கு நடிகர்கள்

Vijay Mahesh Babu Dil Raju Vamshi Paidipally Varisu
By Edward Dec 16, 2022 09:09 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பாஸ் ஆபிஸ் கிங் என்று புகழப்படும் நடிகராகவும் மாஸ் நடிகராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். பீஸ்ட் படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிப்பில் வாரிசு படத்தில் நடித்துள்ளார்.

ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், குஷ்பூ உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள இப்படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் ஒரு பேட்டிக்கொடுத்து பேசியுள்ளார்.

வாரிசு கதை விஜய்க்கு எழுதுனது இல்லையா? தூக்கி எறிந்த மூன்று டாப் தெலுங்கு நடிகர்கள் | Varisu Vijay Not First Choice Dil Raju Open Up

அதில் அஜித்தை விட விஜய் தான் டாப் 1 இடத்தில் இருக்கிறார்.

அதனால் உதயநிதி ஸ்டாலின் வாரிசு படத்திற்கு தான் தியேட்டர்களை அதிகமாக ஒதுக்க வேண்டும் என்று கூறியது தமிழ் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

மேலும் முதலில் வாரிசு படத்தின் கதையை மகேஷ் பாபு, பிரபாஸ், ராம் சரண் போன்ற நடிகர்களிடம் கூறி அவர்கள் வேண்டாம் என்று கூறிவிட்டனர். அதனால் தான் வம்சி விஜய்யை பார்த்து கதையை கூறி கமிட் செய்து நடிக்க வைத்தோம் என்று தில் ராஜு கூறியுள்ளார்.

Gallery