வசூல் ராஜா படத்தில் நடித்த சாம்பு மவன் நடிகரை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?

Kamal Haasan Sneha Actors Tamil Actors
By Kathick Apr 10, 2025 05:30 AM GMT
Report

கமல் ஹாசன், சினேகா, பிரபு, பிரகாஷ் ராஜ், கிரேசி மோகன் என பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் வசூல் ராஜா MBBS. இப்படத்தை இயக்குநர் சரண் இயக்கியிருந்தார். இப்படத்தில் வரும் நகைச்சுவை காட்சிகள் இன்றும் ரசிகர்களின் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

வசூல் ராஜா படத்தில் நடித்த சாம்பு மவன் நடிகரை உங்களுக்கு ஞாபகம் இருக்கா? | Vasool Raja Movie Sambu Mavan Actor Dead

இப்படத்தில் அனைவராலும் கவனிக்கப்பட்ட கதாபாத்திரங்களில் ஒன்று சாம்பு மவன். இந்த நடிகர் சுவாமிநாதன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் கூட, கமல் இவரை சாம்பு மவனே என அழைத்து தான் மக்களிடையே பதிவானது.

படம் முழுவதும் What is The procedure to Change the Room என பேசிய ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துவிட்டார். வசூல் ராஜா படத்திற்கு பின் அவர் எந்த திரைப்படத்திலும் நடிக்கவில்லை.

வசூல் ராஜா படத்தில் நடித்த சாம்பு மவன் நடிகரை உங்களுக்கு ஞாபகம் இருக்கா? | Vasool Raja Movie Sambu Mavan Actor Dead

இந்த நிலையில் அவர் குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர் ஒருவர் இணையதளம் ஒன்றில் அந்த கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகரின் பெயர் என்னவென்று கேட்டு இருந்தார். அதற்கு பதிலளித்த மற்றொரு ரசிகர், "அந்த நடிகர் எனது சகோதரரின் கிளாஸ் மெட் தான். அவர் பெயர் ரத்தின சபாபதி. சாலை விபத்தில் இறந்துவிட்டார்" என குறிப்பிட்டுள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.