தூங்கிட்டு 5 மணிக்கு வாங்க? சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை கலாய்க்கும் நெட்டிசன்கள்..
நடிகர் சிம்பு நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வெந்து தணிந்தது காடு.
ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்து 15 ஆம் தேதி காலை 5 மணி முதல் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது.
படத்தின் பிரமோஷன் விசயங்களுக்கு இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வந்தார்.
அந்தவகையில் சமீபத்தில் பேட்டியொன்றில் படத்தினை 5 மணி காட்சியை பார்க்க நன்றாக தூங்கிவிட்டு வந்து பார்க்கவும் என்று கோரிக்கையாக தெரிவித்தார்.
இதனை பலர் படம் பெரிய அளவு என்பதால் பார்க்கும் போதே தூக்கம் வந்துவிடும் என்பதற்காக கெளதம் மேனன் இப்படி கூறுகிறார் என்று கலாய்த்து வருகிறார்கள்.
வெந்து தணிந்தது காடு ' படத்தை காலை 5 மணி காட்சி பார்க்கப் போகிறீர்கள் என்றால் , முதல்நாள் இரவு நன்றாக தூங்கிவிட்டு வரவும் ; ஏனென்றால் , கதை மற்றும் கதாபாத்திரத்தின் ஓட்டம் , செட் ஆக கொஞ்ச நேரம் எடுக்கும்
— black cat(tribal) (@Cat__offi) September 13, 2022
நாங்க அங்கயே வந்து தூங்கிக்கிறோம்... pic.twitter.com/3fRGkL0NL9