கோட் படம் மற்ற எரியாவில் அடிவாங்க CSK தான் காரணம்!! வெங்கட் பிரபுவுக்கு அட்வைஸ் கொடுத்த நெட்டிசன்கள்..
ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனாட்சி செளத்ரி உள்ளிட்ட பல நடிப்பில் கடந்த செப்டம்பர் 5 ஆம்தேதி வெளியான படம் கோட். பல எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியான இப்படத்தின் வசூல் முதல் நாளில் மட்டும் 126.32 கோடியை வசூலித்தது.
இதனை தொடர்ந்து கோட் படம் வெளியாகி 5 நாட்களை கடந்த நிலையில் வெறும் 310 கோடி மட்டுமே வசூலித்திருக்கிறது. இப்படியே சென்றால் 500 கோடியாவது தொடுமா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது.
CSK தான் காரணம்
இந்நிலையில் கோட் படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் சிஎஸ்கே போட்டியின் பேக்கிரவுண்டில் நடப்பது போன்றும் தோனி விளையாடி சிக்ஸ் அடித்து சென்னை வெற்றிப்பெறுவது போன்றும் வெங்கட் பிரபு அமைத்திருப்பார். சிஎஸ்கே ரசிகராக தமிழ் ஆடியன்ஸை கவர்வதற்கு இப்படியான கிளைமேக்ஸை வைத்திருக்கிறார்.
இது தெலுங்கு மற்றும் இந்தி பீல்ட்டில் உள்ள ரசிகர்களுக்கு இது பிடிக்காமல் போனதுதான் கோட் படத்தில் வசூலில் அடிவாங்க காரணம் என்று வெங்கட் பிரபு தெரிவித்திருக்கிறார்.
இந்தியா மேட்ச் என்றால் இந்தியா முழுவதுமுள்ள ரசிகர்கள் இன்னமும் படத்தை கொண்டாடி இருப்பார்கள் என்றும் என்னதான் வெங்கட் பிரபு சிஎஸ்கே வெறியர் என்றாலும் அனைத்து மக்களையும் கவரும் யூனிவர்ஸல் கதையை கையாண்டு இருக்கலாம்.
அதேபோல் க்ளோனிங்கை சீக்கிரமே கொண்டு வரமாமல் அப்பா, மகன் படமாகவே மாற்றியது உள்ளிட்ட பல விஷங்களும் படத்தின் பின்னடைவுக்கு காரணம் என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.