லோகேஷ் கனகராஜை பொது மேடையில் கிண்டல் செய்த வெங்கட் பிரபு

Lokesh Kanagaraj Venkat Prabhu Actors Tamil Actors
By Dhiviyarajan Aug 18, 2024 06:32 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இன்று தமிழ் சினிமாவின் நம்பர் 1 இயக்குனராக இருப்பவர். இவர் இயக்கத்தில் கடைசியாக லியோ படம் வெளிவந்தது. இப்படத்தின் நாயகன் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் படத்தில் நடித்துள்ளார் என்பது அனைவரும் அறிந்ததே.

தற்போது கோட் படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் வெங்கட் பிரபுவிடம் இது எந்த படத்தின் இரண்டாம் பாகம் என்பது போல் கேள்வி கேட்க, வெங்கட் பிரபு , இது முழுக்க முழுக்க தனிப்படம், நான் இந்த யுனிவர்ஸ் அந்த படத்தை பார்த்துட்டு வாங்கள் என்று சொல்ல மாட்டேன் என சொல்ல அருகில் தயாரிப்பாளர் அர்ச்சனா சிரிப்பை அடக்க முடியாமல் இருக்க, அங்கிருந்தவர்களே லோகேஷுக்கும் இவருக்கும் என்ன பஞ்சாயத்து என்ன இப்படி அட்டாக் பண்ணிட்டாரே என்று கிசுகிசுத்தனர்.