அட்ஜெஸ்ட்மெண்ட் அழைக்கும் விஷயம்!! ரஜினியிடம் கேட்காமல் மனைவி, மகளிடம் கேளுங்கள்.. விசித்ரா..
Rajinikanth
Aishwarya Rajinikanth
Soundarya Rajinikanth
Latha Rajinikanth
Vichithra
By Jai
ஹேமா கமிட்டி
மலையாள சினிமாவில் நிலவி வரும் அட்ஜெஸ்ட்மெண்ட் குறித்து ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கையினால் பலர் கொதித்தெழுந்து பேசி வருகிறார்கள்.

இதுகுறித்து நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான விசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், எந்தவொரு நடிகர்களும் ஹேமா கமிட்டி பற்றி பேச முன்வரவில்லை என்றும் மீடியாக்கள் அவர்களிடம் சென்று இதுகுறித்து ஏன் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறியிருக்கிறார்.
விசித்ரா
இதுபற்றி முன்னணி நடிகர்களின் மனைவியிடம் கேளுங்கள். அவர்கள் குரல் கொடுக்கிறார்களா? ஹேமா கமிட்டி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று ரஜினியிடம் கேட்கிறார்கள்.

ஆனால் அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யாவிடம் சென்று கேட்கவேண்டும். ரஜினிகாந்த் இப்போது தன் படம் நல்லபடியாக ரிலீஸ் ஆகவேண்டும் என்ற டென்ஷனில் இருக்கிறார் என நடிகை விசித்ரா தெரிவித்துள்ளார்.