நடிகை வித்யுலேகாவிற்கு திருமணம் முடிந்தது! வெளியான புதிய தகவல்..

wedding vidyuleka
By Jeeva Sep 11, 2021 07:22 AM GMT
Report

இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன்வசந்தம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை வித்யுலேகா.

இவர் இப்படத்தை தொடர்ந்து தமிழ், தெலுங்கு என ஏகப்பட்ட திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார் வித்யுலேகா.

கடந்த ஆண்டு லாக்டவுன் சமயத்தில், சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் சஞ்சய் உடன் வித்யுலேகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

வருங்கால கணவர் சஞ்சய் உடன் வித்யூலேகா எடுத்துக் கொண்ட நிச்சயதார்த்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்து ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்த்துக்களை பெற்றார்.

இந்நிலையில் வித்யுலேகா மற்றும் சஞ்சய்க்கு திடீரென திருமணம் நடந்து முடிந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்களுக்கு தற்போது பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.