செல்வராகவன் மனைவி இந்த நடிகைக்கு அக்காவா? உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான வித்யுலேகா..

wedding selvaragavan Vidyullekha mohanraman gitanjali
By Edward Sep 09, 2021 06:49 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் கதையாசிரியராகவும் நடிகராகவும் திகழ்ந்து வந்தவர் நடிகர் மோகன் ராம். அவர்க்கு அடுத்தபடியாக அவரது மகள் வித்யுலேகா ராமனை சினிமாவில் அறிமுகப்படுத்தினார். குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து வரும் வித்யுலேகா உடல் பருமன் அதிகமாக காணப்பட்டார்.

இதனால் வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்த வித்யுலேகா சமீபத்தில் உடல் எடையை முற்றிலும் குறைத்து படுஒல்லியாக மாறிய புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்தார். உடல் எடையை குறைக்க நான் தான் முடிவு செய்தேன்.

கடந்த ஆண்டு லாக்டவுன் சமயத்தில் சஞ்சய் என்பவரை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்யப்போவதாகவும் கூறியிருந்தார். தற்போது தள்ளி வைத்த திருமணம் விரையில் இந்த மாதம் திருமணம் செய்யவுள்ளதாகவும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பாஞ்சுலர் பாட்டியை அவரது தோழிகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டார்.

அப்புகைப்படதில் செல்வராகவனும் அவரது மனைவி கீதாஞ்சலியும் கலந்து கொண்டுள்ளார். வித்யுலேகாவிற்கு செல்வராகவன் மனைவி கீதாஞ்சலி உறவினர் முறையில் அக்கா சொந்தமாம். நலங்கு நிகழ்ச்சிகளில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் கீதாஞ்சலி.