அஜித் பட நடிகருக்கு நிச்சயதார்த்தம்! அதுவும் விவாகரத்தானவருடன் தாஜ்மஹாலில் எடுத்து கொண்ட புகைப்படம்..

ajith nandita vidyutjammwal
By Edward Sep 08, 2021 12:00 AM GMT
Report

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்ட படங்களில் ஒன்று பில்லா. அதன் தொடர்ச்சியாக பில்லா 2 பாகம் வெளியாக நல்ல விமர்சனமும் வசூல் பெற்றது. அப்படத்தில் வில்லனாக அறிமுகமாகியவர் வித்யூத் ஜம்வால். இதையடுத்து விஜய்யின் துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்து பிரபலமானார்.

பின் அஞ்சான் படத்தில் சூர்யா நண்பனாகவும் நடித்திருந்தார். சில வருடங்களுக்கு முன் நடிகை மோனா சிங்குடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து கிசுகிசுக்கப்பட்டு வந்த நிலையில் இருவரும் பிரிந்ததாக கடந்த ஆண்டு செய்தி வெளியாகியது.

இந்நிலையில், ஆடை வடிவமைப்பாளர் நந்திதாவுடன் காதலில் இருப்பதாக சமீபத்தில் செய்திகள் பரவியது. தற்போது இருவரும் நிச்சயதார்த்தம் செய்து கொண்டுள்ளார் வித்யூத். தற்போது காதலியுடன் தாஜ்மஹாலுக்கு சென்று அங்கு எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். நந்திதா ஏற்கனவே டெல்லியை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து விவாகரத்து செய்து பிரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGallery