துபாயில் ஒரே ரொமான்ஸ்.. நயன் தாராவுடன் ஆட்டத்தை ஆரம்பித்த விக்னேஷ் சிவன்..
Nayanthara
Dubai
Vignesh Shivan
By Jai
7 வருட காதல்
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன் தாரா கடந்த ஜூன் மாதம் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை 7 ஆண்டுகள் கழித்து பிரம்மாண்ட முறையில் திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு தாய்லாந்து ஹனிமூன், படப்பிடிப்பு என்று பிஸியாக இருந்து வந்தனர். ஒரு மாதத்திற்கு பின் மீண்டும் விக்னேஷ் சிவனுடன் ஸ்பெயின் நாட்டுக்கு அவுட்டிங் சென்றனர்.

ஹனிமூனில் பிஸி
ஒரு மாதமாக அங்கு செய்த ரொமாண்டிக் புகைப்படங்களை வெளியிட்டு வந்தனர். தற்போது இருவரும் துபாய்க்கு சென்றுள்ளனர்.
அங்கு விக்னேஷ் சிவனின் பிறந்த நாளை தன் நண்பர்களுடன் நயன்தாரா கொண்டாடியுள்ளார்.
திருமணமாகி கணவரின் முதல் பிறந்தநாளில் இரவு நேரத்தில் எடுத்த் ரொமாண்டிக் புகைப்படத்தினை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.