ஹனிமூனால் பெரிய பிரச்சனையில் நயன்தாரா கணவர்.. AK62வால் புலம்பும் தயாரிப்பாளர்

Ajith Kumar Nayanthara Lyca Vignesh Shivan
By Edward Aug 29, 2022 08:38 AM GMT
Report

நடிகர் அஜித்குமார் தற்போது எச் வினோத் கூட்டணியில் வலிமை படத்திற்கு பிறகு ஏகே 61 படத்தின் படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இப்படத்தினை அடுத்து விரைவில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் ஏகே62 படத்தினையும் தொடரவுள்ளார்.

இதற்காக விக்னேஷ் சிவன் என்ன வேலை ஆரம்பித்துள்ளார் என்று அஜித் ரசிகர்கள் மத்தியில் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. தற்போது விக்னேஷ் சிவனுக்கு ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். ஏகே 62 படத்தினை பற்றி துளிக்கூட கவலைப்படாமல் காதல் மனைவி நயன் தாராவுடன் ஒரு மாத காலமாக இரண்டாம் ஹனிமூனில் ஜாலியாக இருக்கிறார்.

ஸ்பெயின் நாட்டை சுற்றியுள்ள சுற்றுலா தளங்களுக்கு சென்று அங்கு ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிட்டு வருகிறார். இதனால் கோபத்தில் ஏகே62-வின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா சீக்கிரம் படத்தின் முழு கதையை சொல்ல வேண்டும் என்று நிர்பந்தத்தில் ஆழ்த்தியுள்ளார்களாம்.

ஏற்கனவே என் ஜி கே, காத்து வாக்குல ரெண்டு காதல் படம் ஓரளவு பெற்றி பெற்ற நிலையில் இப்படியொரு கண்டீசனை போட்டிருக்கிறார்கள் லைக்கா நிறுவனம். இதனால் ஹனிமூனில் இருந்து விக்னேஷ் சிவன் இந்தியா வந்து வேலை ஆரம்பிக்கவுள்ளாராம்.

நயன் தாராவும் மிச்சமிருக்கிற ஜவான் படப்பிடிப்பு மற்றும் ஏகே62 படம் மற்றும் இதர படங்களும் நடிக்கவிருக்கிறாராம்.